இந்து அலயங்கள் தாக்கப்படுவதை கண்டித்து மன்னார் மாவட்ட அரசாங்க அதிபரிடம் மகஜர் கையளிப்பு
-குறித்த மகஜரில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,,,
ஆண்மைக்காலமாக வடக்கு,கிழக்கு மாகாணங்களில் உள்ள இந்து ஆலயங்கள் உடைக்கப்பட்டு சேதப்படுத்தப்பட்டு வருகின்றது.
-குறிப்பாக மன்னார்,திருகோணமலை,மட்டக்களப்பு போன்ற மாவட்டங்களில் உள்ள இந்து ஆலயங்கள் உடைக்கப்பட்டு சேதப்படுத்தப்பட்டுள்ளது.அந்த வகையில் இந்து மக்கள் மிகவும் ஆழ்ந்த வேதனையடைந்துள்ளனர்.
இது போன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் இடம் பெறாத வகையில் இந்து ஆலயங்கள் உற்பட நாட்டில் உள்ள அனைத்து வணக்கஸ்தலங்களும் பாதுகாக்கப்பட வேண்டும்.
அதற்கு ஜனாதிபதி உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ அவர்களுக்கு வழங்க அரசாங்க அதிபரிடம் வழங்கப்பட்ட மகஜரில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன் போது மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ஸ்ரான்லி டி மேல் கலந்து கொண்டிருந்தார்.
குறித்த மகஜர் அரசாங்க அதிபரிடம் கையளிப்பதற்காக 'விஸ்வ ஹிந்து பர்சஸ்'' அமைப்பின் மன்னார் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் சுமார் 30 பேர் வரை கலந்து கொண்டிருந்தனர்.
(மன்னார் நிருபர்)
(12-06-2013)
இந்து அலயங்கள் தாக்கப்படுவதை கண்டித்து மன்னார் மாவட்ட அரசாங்க அதிபரிடம் மகஜர் கையளிப்பு
Reviewed by NEWMANNAR
on
June 12, 2013
Rating:
No comments:
Post a Comment