அண்மைய செய்திகள்

recent
-

பிரபல இயக்குநரும் நடிகருமான தமிழ் உணர்வாளர் மணிவண்ணன் மரணம் :

பிரபல இயக்குநரும் நடிகருமான தமிழ் உணர்வாளர்  மணிவண்ணன்(வயது 59) மாரடைப்பால் சென்னையில் மரணம் அடை ந்தார்.




மணிவண்ணன் கோவை மாவட்டத்தில் உள்ள சூலூர் என்ற கிராமத்தில் பிறந்தவர்.  50 படங்களை இயக்கியுள்ள மணிவண்ணன் 400 படங்களை இயக்கியுள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி மொழிகளில் இவர் படங்களை இயக்கியுள்ளார்.

இயக்குநர் பாரதிராஜாவிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த இவர் கோபுரங்கள் சாய்வதில்லை படத்தின் மூலம் இயக்குநரானார்.

நடிகர் சத்யராஜின் கல்லூரி நண்பரான இவர், சத்யராஜை வைத்து 25 படங்கள் இயக்கியுள்ளார்.  நூறாவது நாள், இருபத்து நாலு மணி நேரம், அமைதிப்படை  என சத்யராஜை வைத்து இயக்கிய படங்கள் மிக பிரபலம். கடைசியாக இவர் இயக்கிய படம் ‘ அமைதிப்படை - 2’. இந்தப்படம் ரிலீசாகி தற்போதும் ஓடிக் கொண்டிருக்கிறது. இவரது மகனும் இந்தப்படத்தில் நடித்துள்ளார்.


மணிவண்ணன் மரணம் குறித்த செய்தி அறிந்ததும் திரையுலகினர் அஞ்சலி செலுத்த செல்கின்றனர்.
பிரபல இயக்குநரும் நடிகருமான தமிழ் உணர்வாளர் மணிவண்ணன் மரணம் : Reviewed by Admin on June 15, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.