முசலிப் பிராந்தியத்திற்குத் குடிநீர்த்திட்டம் ஆரம்பிக்கப்படவேண்டும்
மன்னார் மாவட்டத்தில் உள்ள முசலிப் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள பல கிராமங்களில் குடிநீர்ப்பிரச்சினை காணப்படுகிறது . 4ம்கட்டை, சவேரியார்புரம் ,சிலாவத்துறை ,கூளாங்குளம் ,வெளிமலை, மறிச்சுக்கட்டி ,பாலைக்குளி ,வாரிவெளி, அரிப்பு இப்பிராந்தியத்தில் நிலத்தடிநீரையே பெரும்பாலான மக்கள் ஆழ்கிணறுகள் முலமாகப்பெற்றுக்கொள்கின்றனர்
கோடைகாலங்களில் கிணறுகள் வற்றுதல் மாரிகாலங்களில் வெள்ளப்பெருக்கு போன்றவற்றாலும் நீர்மாசு ஏற்படுகின்றது சிலகிராமங்களில் கிணற்றுநீர் உவர்த்தன்மை வாய்ந்ததாகக் காணப்படுகிறது.இந்நீரைக்கொண்டு குளிக்கவோ , ஆடைகளைக்கழுவவோ குடிநிர்ப்பிரச்சினையைத் தீர்த்துக்கொள்ளவோ முடியாதநிலை காணப்படுகிறது
இவ்வாறான கிராமங்களுக்கு முசலிப்பிரதே சபைத்தலைவர் தேசமான்ய அ.வ.எஹ்யான் அவர்களின் வழிகாட்டலில் பௌசர்கள் முலம் நீர் விநியோகம் செய்யப்படுகிறது. விவசாயப்பகுதியான இங்குள்ள கிணற்றுநீர்களில் இரசாயனப்பொருட்கள். கலந்திருக்கும் வாய்ப்பு அதிகமுள்ளது.
இங்கு நீரைச்சுத்திகரித்துப் பாவிக்கும் எவ்விதப்பொறிமுறையும் இதுவரை இல்லை.நீரின் முலம் தொற்றக்கூடிய நோய்களைத்தடுக்கவேண்டிய பொறுப்பு அரசுக்கு உள்ளது சுத்தமான குடிநீர் வழங்கப்படின் இங்குள்ள பெண்கள் பாடசாலைச்சிறார்கள் முதியோர்கள் போன்ற அனைவரும் நன்மையடைவர் என்பது தெளிவு இப்பிராந்தியத்திற்கான குடிநீர்த்திட்டத்தை பின்வரும் நீர்ப்பாசனக் குளங்களில் ஒன்றை மையமாகக்கொண்டு நீர்வழங்கல் திட்டத்தை ஆரம்பிக்கலாம். ..
.முருங்கன் கட்டுக்கரைக்குளம் ...அஹத்தி முறிப்புக ;கட்டுக்கரைக்குளம் ......மறிச்சுக்கட்டிக்கு அண்மையில் உள்ள வியாயடிக்கட்டுக்கரைக்குளம் இத்திட்டம் பூர்த்தி செய்யப்படும்போது பிராந்திய முஸ்லிம் தமிழ் மக்கள் நன்மையடைவதுடன் இளைஞர் யுவதிகளுக்கான வேலைவாய்ப்பும் இதனூடாகக் கிடைக்கும் சந்தர்ப்பஙகளும் அதிகமுள்ளன.
அமைச்சர் றிசாத் பதியுதீன் அவர்களும் ,வன்னி முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும் , முசலிப்பிரதேசசபைத்தலைவர் அவர்களும் , அரசசார்பற்ற நிறுவனங்களும் இணைந்து நடவடிக்கை எடுக்கவேண்டுமென இப்பிராந்திய மக்கள் கோரிக்கைவிடுகின்றனர்.
கே. சி.எம்.அஸ்ஹர்
முசலிப் பிராந்தியத்திற்குத் குடிநீர்த்திட்டம் ஆரம்பிக்கப்படவேண்டும்
Reviewed by NEWMANNAR
on
June 16, 2013
Rating:
.jpg)
No comments:
Post a Comment