அண்மைய செய்திகள்

recent
-

முசலிக்கு தனியான நீதிமன்றம் உருவாக்கப்படல் வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுகின்றனர்

முசலிப் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட கிராமங்களில் குடியேறியுள்ள மக்கள் தாம் எதிர்கொள்ளும் சட்டரீதியான பிணக்குகளைத் தீர்த்துக்கொள்வதற்காக பல கிலோமீற்றர்கள் பயணம் செய்து, முருங்கன் அல்லது மன்னார் பிரதேசங்களில் உள்ள நீதிமன்றங்களுக்குச் சென்றுவரவேண்டியுள்ளது.


 பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்ட மீளக்குடியேறிய இம்மக்களால் வழக்குகளுக்காக அடிக்கடி சென்றுவர அதிக பணம் செலவாகிறது. தமது பிரதேசத்தில் இப்படியான ஒரு நீதிமன்றம் அமைக்கப்படும் போது பயணச்செலவுகள், பயணக் கஸ்டம் என்பன குறையும்; என இம்மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

மேலும், நாட்டின் பல பகுதிகளிலும் இணக்கசபைகள் உருவாக்கப்பட்டு அவையும் சிறப்பாகச் சட்டச்சிக்கல்களை பூர்த்தி செய்து வருகன்றன. இங்கு இணக்கசபைகளும் இன்னும் சரியாகச் செயற்படத்தொடங்கவில்லை.

குறிப்பு: 1990 இடப்பெயர்வுக்கு முன்பு கிராமக்கோடு என்ற ஒரு நீதிமன்ற அலகு பொற்கேணிக்கிராமத்தில் செயற்பட்டு வந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. மேற்சொல்லப்பட்ட விடயங்கள் கருத்தில் கொண்டு முசலியில் நீதிமன்றம் அமைக்கப்பட கௌரவ நீதி அமைச்சர் றவுப் ஹக்கீம் அவர்கள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என மக்கள் கோரிக்கை விடுகின்றனர்.

கே.சி.எம்.அஸ்ஹர்
முசலிக்கு தனியான நீதிமன்றம் உருவாக்கப்படல் வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுகின்றனர் Reviewed by NEWMANNAR on June 16, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.