கைதுசெய்யப்பட்டுள்ள மீனவர்கள் தலைமன்னாரில் தடுத்து வைப்பு
கச்சதீவுக்கு அப்பாலான கடற்பரப்பில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டுக்கொண்டிருந்ததாகக் கூறப்படும் 8 இந்திய மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைதுசெய்துள்ளனர்.
தமிழ்நாட்டின் இராமேஸ்வரத்தைச் சேர்ந்த 8 மீனவர்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 2 ரோலர் படகுகளுடன் கைதுசெய்யப்பட்டுள்ள மீனவர்கள் தலைமன்னாரில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் கூறினர்.
இது இவ்வாறிருக்க ஜுன் மாதம் 12ஆம் திகதி கச்சதீவுக்கு அருகில்; 4 மீனவர்கள் காணாமல் போயுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்களது படகிலுள்ள இயந்திரத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இவர்கள் தத்தளித்துக்கொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
தமிழ்நாட்டின் இராமேஸ்வரத்தைச் சேர்ந்த 8 மீனவர்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 2 ரோலர் படகுகளுடன் கைதுசெய்யப்பட்டுள்ள மீனவர்கள் தலைமன்னாரில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் கூறினர்.
இது இவ்வாறிருக்க ஜுன் மாதம் 12ஆம் திகதி கச்சதீவுக்கு அருகில்; 4 மீனவர்கள் காணாமல் போயுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்களது படகிலுள்ள இயந்திரத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இவர்கள் தத்தளித்துக்கொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
கைதுசெய்யப்பட்டுள்ள மீனவர்கள் தலைமன்னாரில் தடுத்து வைப்பு
Reviewed by NEWMANNAR
on
June 16, 2013
Rating:

No comments:
Post a Comment