இடம்பெயர்ந்தவர்கள் வாக்காளராவதற்கான கால அவகாசம் நீடிப்பு
வெளியிடப்படவுள்ள அங்கீகரிக்கப்பட்ட வாக்காளர் இடாப்பில் பெயர் உள்வாங்கப்படாதவர்கள் மேன்முறையீடு செய்வதற்கு வழங்கப்பட்ட மேலதிக கால அவகாசமும் ஜூலை மாதம் 9ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வடக்கு, கிழக்கில் நிலவிய யுத்தம் மற்றும் மோதல்களால் இடம்பெயர்ந்து வேறு பகுதிகளில் வாக்காளர்களாக தம்மை பதிவு செய்துகொள்ளாத பிரஜைகள் 2012 ஆம் ஆண்டுக்குரிய வாக்காளர் இடாப்பில் பெயர்களை பதிவு செய்வதற்கு வழங்கப்பட்டிருந்த கால அவகாசம் நேற்றுடன் நிறைவுபெற்றது.
எனினும் இதற்கான தகமையை பெற்றுள்ளவர்கள் முன்வைத்திருந்த வேண்டுகோளை கருத்திற்கொண்டு அந்த கால அவகாசத்தை நீடிப்பதற்கு தேர்தல்கள் செயலகம் தீர்மானித்துள்ளது.
இதற்கமைய இலக்கம் 10 யாழ்ப்பாணம் மற்றும் இலக்கம் 11 வன்னி ஆகிய தேர்தல் மாவட்டங்களில் வாக்காளர் பெயர்ப் பட்டியல்களை அலுவலக நேரங்களில் மாவட்ட செயலகங்களில் பார்வையிட முடியும் எனவும் ஏற்கனவே வெளியிடப்பட்ட அறிவித்தல் இரத்து செய்யப்பட்டுள்ளது.
யாழ் மற்றும் வன்னி தேர்தல் மாவட்டங்களுக்கு உட்பட்ட யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்ட தேர்தல்கள் அலுவலகங்களில் வாக்காளர் இடாப்புக்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாக யாழ் மற்றும் வன்னி உதவி தெரிவத்தாட்சி அதிகாரிகள் இன்றைய திகதியை குறிப்பிட்டு வெளியிட்டுள்ள அறிக்கைகள் செல்லுபடி அற்றதாக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் மேலும் தெரிவித்துள்ளார்.
இடம்பெயர்ந்தவர்கள் வாக்காளராவதற்கான கால அவகாசம் நீடிப்பு
Reviewed by Admin
on
June 30, 2013
Rating:

No comments:
Post a Comment