அண்மைய செய்திகள்

recent
-

இன்று மீண்டும் கூட்டமைப்பை சந்திக்கவுள்ளது தென்னாபிரிக்க தூதுக்குழு

இலங்கை வந்­துள்ள தென்­னா­பி­ரிக்காவின் பிரதி வெளிவி­வ­கார அமைச்சர் இப்­­ராஹிம் இப்­ராஹிம் தலை­மை­யி­லான தூதுக்­கு­ழு­வினர் இன்று புதன்­கி­ழ­மை மீண்டும் தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்­பி­னரை சந்­தித்து பேச­வுள்­ளனர்.



கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை இலங்கை வந்­தி­ருந்த தென்­னா­பி­ரிக்க குழு­வினர் நேற்று முன்­தினம் காலை தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்பின் தலைவர் இரா. சம்­பந்தன் தலை­மை­யி­லா­ன தூதுக்­கு­ழு­வி­னரை சந்­தித்து பேச்­சு­வார்த்தை நடத்­தி­யி­ருந்­தனர்.

இத­னை­ய­டுத்து நேற்று காலை வெளிவி­வ­கார அமைச்சர் ஜி.எல். பீரிஸ் தலை­மை­யி­லான அர­சாங்க தூதுக்­கு­ழு­வி­ன­ரையும் தென்­னா­பி­ரிக்­காவின் பிரதி வெளிவி­வ­கார அமைச்சர் தலை­மை­யி­லான குழு­வினர் சந்­தித்து பேச்சு­வார்த்தை நடத்­தினர். அர­சாங்கத் தரப்­பு­ட­னான பேச்­சுக்­களை அடுத்து இன்று மீண்டும் கூட்­ட­மை­ப்­பி­னரை இந்தக் குழு­வினர் சந்­திக்­கின்­றனர்.

நேற்று முன்­தினம் கொழும்பு சினமன் கிராண்ட் ஹோட்­டலில் நடை­பெற்ற கூட்­ட­மைப்­பி­ன­ரு­ட­னான சந்­திப்பின் போது இனப்­பி­ரச்­சி­னைக்கு அர­சியல் தீர்வு காண்­ப­தற்­கான வழி­வ­கைகள் குறித்து ஆரா­யப்­பட்­டன. இருந்த போதி­லும் இல­ங்­கையின் தற்­போ­தைய சூழல் சம­ர­சத்­திற்கோ, இணக்­கப்­பாட்­டிற்கோ ஏது­வாக அமை­ய­வில்லை. இதனால் இரு­த­ரப்­பிற்­கு­மி­டையில் இணக்­கத்தை ஏற்­ப­டுத்த தொடர்ந்தும் முயற்­சிகள் மேற்­கொள்­ளப்­படும் என்று தென்னா­பி­ரிக்கத் தூதுக்­குழு தெரி­வித்­தி­ருந்­தது.

வெளிவி­வ­கார அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் தலை­மை­யி­லான அர­சாங்க தூதுக்­கு­ழு­­வு­ட­னான சந்­திப்பின் போது பேச்­சு­வார்த்­தையை மீள ஆரம்­பிப்­பது தொடர்­பி­லான அர­சாங்­கத்தின் நிலைப்­பாட்டை தென்­னா­பி­ரிக்கக் குழு கேட்­ட­றிந்­துள்­ளது. இது தொடர்பில் கூட்­ட­மைப்­பி­ன­ருக்கு அறி­விப்­ப­தற்­கா­கவே இன்­றைய சந்­திப்பு இடம் பெற­வுள்­ள­தாக தெரி­கின்­றது.


இன்று மீண்டும் கூட்டமைப்பை சந்திக்கவுள்ளது தென்னாபிரிக்க தூதுக்குழு Reviewed by Admin on June 26, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.