அண்மைய செய்திகள்

recent
-

பிள்ளைகளை தனியே வீட்டில் விட்டுச்செல்வதை தவிர்க்கவும்: பொலிஸ்

பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளில் அதிக அக்கறை காட்டுவதுடன், அவர்களின் நடவடிக்கைகளையும் உண்ணிப்பாக அவதானிக்க வேண்டும். பிள்ளைகளை தனியே வீட்டில் விட்டு வெளியே செல்வதை தவிர்த்துக் கொள்ளுமாறு பொலிஸார் கேட்டுள்ளனர். 

'கலாசாரத்தினை இறுக்கமாக கடைப்பிடிப்பதில் பேர் போன யாழ். மாவட்டம், தற்போது கலாசார சீரழிவுகளால் பல்வேறு சமூகப் பிரச்சினைகளை எதிர்நோக்கி வருவது கவலையளிப்பதாக யாழ். பிரதேச உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எம்.சி.எம்.ஜெவ்ரி தெரிவித்தார்.

யாழ். பொலிஸ் நிலையத்தில் இன்று நடைபெற்ற வாராந்த பத்திரிகையாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், 'நான் சிறுவயதில் இருக்கும் போது யாழ்ப்பாணத்தில் கல்வி பயின்று வந்தேன். அப்போது யாழ்ப்பாணத்தில் கலாசாரம் இறுக்கமாக கடைபிடிக்கப்பட்டிருந்தது எனக்கு நன்றாக தெரியும். 

ஆனால், தற்போது, யாழ்ப்பாணத்தில் கலாசாரம் சீரழிக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையை மாற்றுவதற்கு பெற்றோர்கள் பிள்ளைகளில் மிகவும் அக்கறை காட்ட வேண்டும்' என்றார்.

'சிறு பிள்ளைகளை வீட்டில் தனியாக இருக்க விடாது, பெரியவர் ஒருவரின் கண்காணிப்பில் தங்க விட வேண்டும். 18 வயதுக்கு குறைந்த பிள்கைளிடம் கையடக்கத் தொலைபேசி பாவணைகளை கட்டுப்படுத்த வேண்டும். அதிக துஷ்பிரயோகங்கள் இடமபெறுவது கையடக்கத் தொலைபேசி பாவணையால் என்பது விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது. 

அண்மையில், யாழ். நகரில் உள்ள பாடசாலை மாணவிகள் மூவரிடம் கையடக்கத் தொலைபேசி இருப்பதை அவதானித்த ஆசிரியர் மாணவிகளை பேசியதுடன், பாடசாலையை விட்டு வெளியேறுமாறு கூறியுள்ளார்.

குறித்த 3 மாணவிகளில் ஒரு மாணவி தனது நண்பனுடன், வல்வெட்டித்துறையில் உள்ள தனது உறவினரின் வீட்டிற்கு சென்று அங்கிருந்து மாலை யாழ். பொலிஸ் நிலையத்திற்கு வருகை தந்துள்ளார்.

யாழ். சிறுவர் பெண்கள் பொலிஸ் பரிவில் மூன்று மாணவிகளும் பெற்றோர்களும் விசாரணைக்குட்படுத்தப்பட்ட போது, குறித்த பாடசாலை மாணவிகளிடம் கையடக்கத் தொலைபேசி இருப்பது தொடர்பாக பெற்றோர்களுக்கு தெரியவில்லை.

இதனால், பெற்றோர்கள் பிள்கைளில் அதிக அக்கறை காட்டுவதுடன், அவர்களின் நடவடிக்கைகளையும் உண்ணிப்பாக அவதானிக்க வேண்டுமென்றும், பிள்ளைகளை தனியே வீட்டில் விட்டு வெளியே செல்வதை தவிர்த்துக் கொள்ளுமாறும்' அவர் கேட்டு கொண்டுள்ளார்.



பிள்ளைகளை தனியே வீட்டில் விட்டுச்செல்வதை தவிர்க்கவும்: பொலிஸ் Reviewed by Admin on June 21, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.