கிளிநொச்சி தபால் சேவைகள் நடைமுறை பிரச்சினைகள் குறித்து ஆராய்வு
பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்றக்குழுக்களின் பிரதி தலைவருமான முருகேசு சந்திரகுமாரின் தலைமையில் கிளிநொச்சி தபால் நிலையத்தில் கலந்துரையாடப்பட்டது
கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள தபாலகங்களில் உள்ள தேவைகள் மற்றும் ஆளணி பற்றாக்குறைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் ஆராய்ப்பட்டது இதன் போது அங்கு கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் அவர்கள் தபால் விநியோக செயற்பாடுகள் மக்களுக்கு மிகவும் அத்தியவசியமான சேவை எனவே இயன்றவரை மக்களுக்கு சிறந்த சேவையினை வழங்க வேண்டும் தபால் நிலையங்களிலும, விநியோக செயற்பாடுகளிலும் பல்வேறு நடைமுறை பிரச்சினைகள் உண்டு
அவ்வாறான பிரச்சினைகளை நாம் அறிந்துள்ளோம் அவற்றை எதர்காலத்தில் தீர்த்து வைப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் நாம் மேற்கொள்வோம் ஆனால் தற்போது பணியாற்றுகின்ற தபால் ஊழியர்கள் கடந்த நெருக்கடியான காலத்தில் செய்தது போன்று எதிர்வரும் காலங்களிலும் சிறந்த சேவையினை மேற்கொள்ள பெருபாலும் கிராமங்களில் தபால் விநியோகம் மேற்கொள்கின்ற போது மக்களுக்கான கடிதங்கள் கிராமங்களிலுள்ள பொது இடங்கள் மற்றும் வியாபார நிலையங்களில் வழங்கிவிட்டுச் செல்வதாகவும் இதனால் மக்களுக்கு பல்வேறு அசௌகரியங்கள் ஏற்படுவதாகவும் மக்கள் எம்மிடம் தெரிவிக்கின்றனர்.
எனவே அவற்றை தவிர்த்து மக்களின் வீடுகளுககே சென்று கடிதங்கள் விநியோகம் மேற்கொள்ள வேண்டும் எனவும் குறிப்பிட்டார்
இங்கு கருத்து தெரிவித்த வட மாகாண உப தபாலதிபர் இரத்தினசிங்கம் அவர்கள் தபால் விநயோகங்கள் கிராமங்களில் உள்ள பொது இடங்களிலோ அல்லது வியாபார நிலையங்களிலோ கொடுத்து விட்டுவருது தவிர்க்கப்படல் வேண்டும்
கடிதங்கள் எவருக்கு வருகிறதோ அவரிடம் சேர்க்கவேண்டும் இதனை கட்டாயம் நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
இக்கலந்துரையடலில் கிளிநொச்சி முல்லைத்தீவு வவுனியா பிராந்திய தபால் அத்தியட்சர் திருமதி சல்காது கிளிநொச்சி தபாலதிபர், உப தபாலகங்களின் அதிபர்கள் ஊழியர்கள் என பலர் கலந்துகொண்டனர்
கிளிநொச்சி தபால் சேவைகள் நடைமுறை பிரச்சினைகள் குறித்து ஆராய்வு
Reviewed by Admin
on
July 07, 2013
Rating:

No comments:
Post a Comment