'வேட்பாளர் தெரிவில் சமூக ஈடுபாடுள்ளவர்களை உள்வாங்க வேண்டும்'
இது தொடர்பில் அவர்கள் தெரிவிக்கையில், 'வட மாகாணசபை தேர்தலானது முக்கியத்துவம் வாய்ந்துள்ள நிலையில் அதற்கான வேட்பாளர்களை தேர்வு செய்வதில் கட்சிகள் மும்முரம் காட்டி வருகின்றன.
இந்நிலையில் கட்சியின் பிரமுகர்கள் தமது உறவினர்கள், முன்னாள் போராளிகள், பணம் படைத்தவர்கள் என்ற கோணத்தில் மாத்திரம் பார்த்து வேட்பாளர்களை நிறுத்துவதை தவிர்த்து சமூகத்துடன் ஈடுபாடுள்ளவர்கள், மொழியாற்றல் உள்ளவர்கள், கல்வியியலாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள், பல்துறை சார்ந்தவர்களை தெரிவு செய்யவேண்டும்.
இந்தவகையில் வட மாகாண சபை தேர்தலுக்கான வேட்பாளர் தெரிவு தொடர்பில் வவுனியா மாவட்ட சிவில் அமைப்புக்கள் கவனம் செலுத்தவுள்ளதுடன் தகுதியுள்ள ஒருவர் போட்டியிடும் கட்சிக்கு தாம் வெளிப்படையாக ஆரதவளிக்கவும் தீர்மானித்துள்ளோம் எனவும் தெரிவித்தனர்.
'வேட்பாளர் தெரிவில் சமூக ஈடுபாடுள்ளவர்களை உள்வாங்க வேண்டும்'
Reviewed by Admin
on
July 07, 2013
Rating:
.jpg)
No comments:
Post a Comment