25 வருடங்களுக்கு பின்னர் மடு உற்சவத்திற்கு ரயில் சேவை; போக்குவரத்து அமைச்சு
அதன்படி உற்சவ காலத்தில் ஏராளமான பக்தர்கோடிகள் தூர இடங்களிலிருந்து சிரமம் இல்லாமல் வருவதற்கும் போவதற்கும் என விசேட ரயில் சேவைகள் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளதுடன் இவர்களுக்கென அளுத்கமையில் இருந்து இரு விசேட ரயில்களும் புறக்கோட்டையில் இருந்து இரு ரயில்களும் நீர்கொழும்பில் இருந்து மூன்று ரயில்களும் மொரட்டுவையில் இருந்து ஒரு ரயிலும் மதவாச்சியிலிருந்து மடு வரையும் பவர்செட் ரயில் சேவைகளும் தினமும் இடம்பெறும் மேலும் ரயில் சேவைகள் மட்டுமல்லாது பஸ்களும் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளது.
அந்தவகையில் மடு ரயில் நிலையத்தில் இருந்து மடுமாதா தேவாலயம் வரை பத்து பஸ்கள் சேவையில் ஈடுபடுவதோடு வடக்கு மற்றும் நாட்டின் ஏனைய பகுதிகளில் இருந்தும் மடு மாதா தேவாலயம் வரை இ.போ.ச. பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தவும் ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மேலும் 25 வருடங்களின் பின் முதற் தடவையாக மடுமாதா உற்சவத்திற்காக ஓகஸ்ட் 12 முதல் 15 வரை ரயில்கள் சேவையில் ஈடுபடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
25 வருடங்களுக்கு பின்னர் மடு உற்சவத்திற்கு ரயில் சேவை; போக்குவரத்து அமைச்சு
Reviewed by Admin
on
July 25, 2013
Rating:

No comments:
Post a Comment