கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பு குழுவில் மாற்றம்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிரதிநிதிகளுக்கிடையே கொழும்பில் நேற்று நடைபெற்ற கூட்டத்தின் போதே இந்த மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஐந்து கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் இடையில் நேற்று சனிக்கிழமை மாலை; கொழும்பில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
இந்த சந்திப்பில், தமிழரசுக் கட்சி சார்பில் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுக்களின் தலைவர் இரா.சம்பந்தன், சுமந்திரன், தமிழர் விடுதலைக் கூட்டணியின் சார்பில் சங்கையா, ஈ.பி.ஆர்.எல்.எவ் சார்பில் செயலாளர் நாயகம் சுரேஸ் பிரேமச்சந்திரன், ரெலோ சார்பில் அதன் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், என். சிறீகாந்தா, ஹென்ரி மகேந்திரன், புளொட் சார்பில் சிவநேசன் (பவன்) ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.
இதன்போது, வடமாகாண சபைக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டமை தொடர்பிலும், இடம்பெயர்ந்த வாக்காளர் பதிவுகள் பற்றியும் விரிவாக கலந்துரையாடப்பட்டது.
அத்துடன் ஒவ்வொரு கட்சிக்கும் தலா மூவர்வீதம் பதினைந்துபேரை உள்ளடக்கிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக்குழுவை அமைப்பதென்று முன்னர் இணக்கம் காணப்பட்டிருந்தது.
அந்த விடயத்தில் சிறு மாற்றம் செய்யப்பட்டு ஒவ்வொரு கட்சிக்கும் தலா நால்வர்வீதம் இருபது பேரும் கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுக்களின் தலைவர் இரா.சம்பந்தனும் ஒருங்கிணைப்புக்குழுவில் உள்ளடக்கப்பட்டு அந்த ஒருங்கிணைப்புக்குழுவின் எண்ணிக்கையை மொத்தம் இருபத்தொருபேராக அதிகிரிப்பதென்று முடிவெடுக்கப்பட்டது.
இந்த ஒருங்கிணைப்புக் குழுவானது எதிர்வரும் 11ஆம் திகதி சந்திப்பதென்றும் தீர்மானிக்கப்பட்டது.
கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பு குழுவில் மாற்றம்
Reviewed by Admin
on
July 07, 2013
Rating:

No comments:
Post a Comment