அண்மைய செய்திகள்

recent
-

தமிழர்களிடம் தற்போது எஞ்சியிருப்பது கல்வி என்ற ஆயுதம் மட்டுமே: பா.அரியநேந்திரன் (படங்கள்)

தமிழ் மக்களிடம் தற்போது எஞ்சியிருப்பது கல்வி என்ற ஆயுதம் மட்டும்தான் அதனை தமிழ் பிள்ளைகள் இறுகப்பற்றிப் பிடிக்க வேண்டும் என  தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேந்திரன் தெரிவித்துள்ளார்.



மட்டக்களப்பு அம்பிளாந்துரை வடக்கில் பிரித்தானியா எனின்தரோ பல்கலைக்கழக மாணவர்களினால் அமைக்கப்பட்ட பாலர் பாடசாலை திறப்புவிழா நிகழ்வில் அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும்போதே மேற்கண்டவாறு கூறினார்.

அவர் தொடர்ந்து கூறுகையில்,

இன்று தமிழர்களிடம் எஞ்சியிருப்பது இரண்டு விடயங்கள்தான் அதில் ஒரு விடயம் தமிழ் தேசிய உணர்வு மற்றது கல்வி கற்க வேண்டும் என்ற உணர்வு இந்த இரண்டு விடயங்களுமே இன்று தமிழர்களின் அடையாளமாகவுள்ளது.

குறிப்பாக தமிழ் மக்கள் கடந்த காலங்களில் தங்களது உரிமைகளை வென்றெடுப்பதற்கு பல ஆயுதங்களை கையில் எடுத்திருந்தாலும் இன்று தமிழ் மக்களிடம் எஞ்சியிருக்கின்ற ஆயுதம் கல்வி என்ற ஆயுதம் மட்டுமே.

அந்த வகையில் தமிழர்களின் கல்வியை விருத்தி செய்யும் நோக்குடன் இவ்வாறான பாலர் பாடசாலையை திறப்பதற்கு முன்வந்துள்ள பிரித்தானிய பல்கலைக்கழக மாணவர்களை தமிழ் மக்கள் சார்பாக நாங்கள் பாராட்டி வரவேற்கின்றோம்.

இதேபோன்று இங்குள்ள பெற்றோர்கள் வெறுமனே அபிவிருத்தி, சலுகைகள் என்று கூறி ஏமாற்றுபவர்களுக்கு பின்னால் சென்று தங்களுடைய பிள்ளைகளின் எதிர்காலத்தை வீணடிக்காமல் பிள்ளைகளின் கல்வியில் கவனம் செலுத்தி அவர்களை எதிர் காலத்தில் ஏனைய சமூகங்களுக்கு இணையாக வளர்த்தெடுப்பதற்கு முயற்சிக்க வேண்டும் அதன் ஊடாகவே தமிழினம் எதிர்காலத்தில் சுயமாக தலைநிமிர்ந்து நிற்கக்கூடியதாக இருக்கும் என்றார்.

கிராம அபிவிருத்திச்சங்கத்தின் தலைவர் திரு. சசிதரன் தலைமையில் நடைபெற்ற திறப்புவிழா நிகழ்வில் வலய உதவிக் கல்விப்பணிப்பாளர் திரு.பாஸ்கரன் அவர்களும் கலந்துகொண்டார்.






தமிழர்களிடம் தற்போது எஞ்சியிருப்பது கல்வி என்ற ஆயுதம் மட்டுமே: பா.அரியநேந்திரன் (படங்கள்) Reviewed by Admin on July 28, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.