முதலமைச்சர் வேட்பாளர் தொடர்பில் ஓரிரு தினங்களில் உறுதியான முடிவு : சம்பந்தன்
வடமாகாண சபைக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளர் தொடர்பில் சர்ச்சை நிலவிவருகின்றது. கூட்டமைப்பின் செயலாளரும் எம்.பி.யுமான மாவை சேனாதிராஜாவை முதலமைச்சர் வேட்பாளராக நியமிக்கவேண்டுமென்று ஒரு தரப்பும், முன்னாள் உயர் நீதிமன்ற நீதியரசர் சீ.வி. விக்னேஸ்வரனை நியமிக்க வேண்டுமென்று மறுதரப்பும் வலியுறுத்தி வருகின்றன.
இந்த நிலையில் முதலமைச்சர் வேட்பாளர் தெரிவு குறித்து கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-வடமாகாணசபைக்கான முதலமைச்சர் வேட்பாளர் குறித்து ஓரிரு தினங்களில் முடிவு எடுக்கப்படும்.
இன்று மாலை கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சித் தலைவர்களது கூட்டம் இடம் பெறவுள்ளது. முதலமைச்சர் வேட்பாளர் தொடர்பான முடிவு தமிழ் தேசியக்கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் ஏகோபித்த கருத்துக்களை உள்ளடக்கியதாகவே அமையும். கூட்டுக்கட்சிகளுடன் கலந்து பேசி கூட்டு முயற்சியாக நல்லதொரு முடிவு எடுக்கப்படும்.
முதலமைச்சர் வேட்பாளர் தொடர்பில் ஓரிரு தினங்களில் உறுதியான முடிவு : சம்பந்தன்
Reviewed by Admin
on
July 11, 2013
Rating:

No comments:
Post a Comment