விமானப் படையின் தேவைகளுக்காக வலி.வடக்கில் சுண்ணாம்புக் கல் அகழ்வு! வழக்கு தாக்கல் கூட்டமைப்பு தீர்மானம்
மேற்படிச் சுண்ணக்ம்புக்கல் அகழ்விற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ள வலி.வடக்குப் பிரதேச சபை, இவ்விடயம் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்குத்தாக்கல் செய்யவுள்ளது என்று வலி.வடக்குப் பிரதேச சபை உப தவிசாளர் எஸ்.சஜீவன் தெரிவித்துள்ளார்.
1990 ஆம் ஆண்டு யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்த வலி.வடக்கு கடந்த 3 வருடங்களாக பகுதி பகுதியாக மீள்குடியேற்றம் செய்யப்பட்டு வருகின்றது. இருப்பினும் இன்னமும் முழுமையான மீள்குடியேற்றம் அங்கு நடைபெற்றவில்லை.
இதுவரைக்கும் விடுவிக்கப்படாத 23 கிராமசேவகர் பிரிவினையும் இராணுவத்தின் தேவைக்காக சுவிகரிக்கப்படவுள்ளதாக அறிவித்தவர்கள் ஒட்டப்பட்டுள்ளது. அவ்வறிவித்தல்களை காணி அமைச்சரும் ஏற்றுக் கொண்டு நிச்சயமாக வலி.வடக்குப் பகுதியில் தற்போது இராணுவத்தின் கட்டுப்ப்hட்டின் கீழ் உள்ள பொது மக்களுடைய நிலங்கள் சுவீகரிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் கீரிமலைப் பகுதியில் பெருமளவான சுண்ணாம்புக் கற்கள் அகழ்ந்தெடுக்கப்பட்டு, அங்கு பெரிய கல்லுடைக்கும் இயந்திரத்தின் மூலம் கற்கள் அரைக்கப்பட்டு சல்லிகளாக மாற்றப்படுகின்றது. இதனால் அப்பகுதியில் பாரிய குழிகள் காணப்படுகின்றது.
மேலும் மாவட்டபுரத்தில் இருந்து கீரிமலைக்குச் செல்லும் பாதையின் இருமருங்கிலும் அகழப்பட்ட சுண்ணாம்புக்கற்கள் குவிக்கப்பட்டுள்ளது. கற்கள் குவிக்கப்பட்ட இடங்களில் இது சிறிலங்கா விமானப்படைக்குச் சொந்தமானது என அறிவுறுத்தல் பலகையும் நாட்டிவைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு தொடர்ச்சியாக செய்யப்பட்டுவரும் சுண்ணாம்புக்கல் அகழ்வினால் அதனை அண்மித்த பகுதிகளான கொல்லங்கலட்டி, கருவப்பானை, நகுலேஸ்வரம், பன்னாலை போன்ற கிராமங்களில் உள்ள கிணற்று நீர் உவர் நீராக மாற்றமடைந்து வருகின்றது.
இவ்விடயம் தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் அப்பாத்துரை விநாயகமூர்த்தினால் சுற்றுச் சூழல் அமைச்சரின் கவனத்திற்குக் கொண்டுசெல்லப்பட்டுள்ளது.
மேலும் அப்பகுதியில் நடைபெறும் சுண்ணாம்புக்கல் அகழ்விற்கு எதிர்ப்புத் தெரிவித்து வலி.வடக்குப் பிரதேச சபைக் கூட்டத்தில் கண்டனத் தீர்மானம் ஒன்றும் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆயினும் சுண்ணாம்புக்கல் அகழும் பணிகள் தொடர்ச்சியாக நடைபெற்றுக் கொண்டு இருக்கின்றது.
இதனால் எதிர்வரும் காலங்களில் மேற்குறித்த கிராமங்களின் குடிநீர் உவர் நீராகா மாற்றமடைவதுடன், அப்பகுதியில்ன விவசாய நடவடிக்கைகளும் முற்றாகப் பதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
எனவே இவ்விடயம் தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்புச் சார்பில் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரவும் ஏற்பாடுகள் நடைபெறுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
விமானப் படையின் தேவைகளுக்காக வலி.வடக்கில் சுண்ணாம்புக் கல் அகழ்வு! வழக்கு தாக்கல் கூட்டமைப்பு தீர்மானம்
Reviewed by Admin
on
July 29, 2013
Rating:

No comments:
Post a Comment