அண்மைய செய்திகள்

recent
-

தமிழ் மக்கள் தமிழ் தேசியக்கூட்டமைப்பை தவிர வேறு எந்த கட்சிகளுக்கு ஆதரவளித்தாலும் அவர்கள் அடிமையாக்கப்படுவார்கள்.- இ.செபமாலை அடிகளார்.

யுத்த காலத்திலும் சரி,தற்போதைய காலங்களிலும் சரி ஆயர் அவர்களும்,சக குருக்களும் தமிழ் மக்களின்   உரிமைக்காகவும்,அரசியல் தீர்வுக்காகவும்,தமிழ் மக்களின் விடுதலைக்காகவும் உறுதியுடன் செயற்பட்டனர்.


தற்போதும் உறுதியுடன் செயற்பட்டு வருகின்றனர்.இந்த நிலையில் மன்னார் மாவட்ட கத்தோலிக்க அருட்தந்தையர்களின் ஜனாதிபதி சந்திப்பு தமிழ் மக்களை காட்டிக்கொடுப்பதாகவோ அல்லது அரசாங்கத்திற்கு ஆதரவாக செயற்படுவதாகவே இல்லை என மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்தந்தை இ.செபமாலை அடிகளார் தெரிவித்தார்.

மன்னார் ஆயர் இல்லத்தில் நேற்று திங்கட்கிழமை இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் அவ்வாறு தெரிவித்தார்.அவர் மேலும் தெரிவிக்கையில்,,,,,,,

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ அவர்களை கடந்த 18 ஆம் திகதி கத்தோலிக்க குருக்கள் கொழும்பிற்கு சென்று சந்தித்தோம்.குறித்த சந்திப்பின் பின் நான் உணர்ந்து கொண்டேன் எங்களுடைய தமிழ் மக்கள் உண்மையிலேயே சயநிர்ணயம்,உரிமை ஆவற்றை அடைந்து கொள்ள தற்போதைய சூழ்நிலையில் தமிழர்களுக்கு சார்பாக உள்ளது தமிழ் தேசியக்கூட்டமைப்பு.

தமிழ் மக்கள் வேறு எந்த கட்சிகளுக்கு வாக்களித்தாலும் அவர்களின் செயற்பாடுகள் அதிகரித்த நிலையில் தமிழ் மக்கள் அடிமைகளாக்கப்படுவார்கள்.

தற்போதைய சூழ்நிலையில் சுய நிர்ணயம்,அரசியல் தீர்வு மற்றும் மக்களின் உரிமை தொடர்பில் குரல் கொடுத்து வருகின்றது தமிழ் தேசியக்கூட்டமைப்பு மற்றும் அவர்கள் சார்ந்த கட்சிகளும் ஆகும்.

எனவே தமிழ் மக்கள் சலுகைகளுக்காக விலை போகின்ற சந்தர்ப்பங்களும்,அதிகாரிகள் தமது பதவிக்காக அவர்கள் பக்கம் நிற்கின்ற சந்தர்ப்பங்களும்,அப்பாவி ஏழை மக்கள் விலை பேசப்படுகின்ற சந்தர்ப்பங்களும் இடம் பெற்று வருகின்றது.

மக்களுக்கு ஒரு தெளிவான விளக்கம் தேவைப்படுகின்றது. சில சில சலுகைகளுக்காக எமது உரிமைகளை இழக்கின்றோம்.

நாம் தற்போது முக்கிய கட்டத்தில் இருக்கின்றோம்.சகல நாடுகளும் அவதானித்துக்கொண்டிருக்கின்றது.எமது முக்கிய நோக்கம் இந்த வடமாகாண சபையை அமைத்து தமிழ் மக்களின் கைகளில் வருகின்ற போதே நாம் உறுதியான முடிவை எடுக்க முடியும்.

நாங்கள் எமது விடயங்களில் உறுதியாக இல்லாது விட்டால் ஏனையவர்கள் எங்களை ஏழளனமாக பார்ப்பார்கள்.

எனவே இந்த சந்தர்ப்பத்தை தவற விடவேண்டாம்.என என மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்தந்தை செபமாலை அடிகளார் தெரிவித்தார் .


தமிழ் மக்கள் தமிழ் தேசியக்கூட்டமைப்பை தவிர வேறு எந்த கட்சிகளுக்கு ஆதரவளித்தாலும் அவர்கள் அடிமையாக்கப்படுவார்கள்.- இ.செபமாலை அடிகளார். Reviewed by Admin on July 23, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.