அண்மைய செய்திகள்

recent
-

முன்னாள் போராளிகளுக்கு இலகு கடன்களை வழங்க நடவடிக்கை.

தொழிலற்ற நிலையில் இருக்கின்ற முன்னாள் போராளிகளுக்கு இலகு கடன்களை வழங்குவதற்காக சிறைச்சாலைகள் மற்றும் புனர்வாழ்வு மறுசீரமைப்பு
அமைச்சர் சந்திரசிறி கஜதீர இன்று முல்லைத்தீவுக்கு விஜயம் செய்யவுள்ளார்.


அமைச்சரின் இவ் விஜயத்தின் போது காலை 10 மணியளவில் முல்லைத்தீவு தமிழ் மகா வித்தியாலயத்தில் முன்னாள் போராளிகளைச் சந்தித்துக் கலந்துரையாடவுள்ளனர் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பிற்பகல் 2.30 மணியளவில் துணுக்காய் பிரதேச செயலக மண்டபத்தில் முன்னாள் போராளிகளைச் சந்தித்து அமைச்சர் கலந்துரையாடவுள்ளார்.

இச் சந்திப்புக்களில் முன்னாள் போராளிகளுக்கு இலகு கடன்களை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் போராளிகளுக்கு இலகு கடன்களை வழங்கி அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக இந்த வருடம் 525 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிதி போரால் பாதிப்படைந்துள்ள முல்லைத்தீவு மாவட்டத்திற்கு அதிகளவில் ஒதுக்கீடு செய்யப்படும் எனவும் இவ் அமைச்சின் சிரேஷ்ட ஆலோசகர் சி.சதீஸ்குமார் தெரிவித்துள்ளார்.


முன்னாள் போராளிகளுக்கு இலகு கடன்களை வழங்க நடவடிக்கை. Reviewed by Admin on July 20, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.