கிளிநொச்சி வேராவில் கிராம மக்களுடன் த.தே. கூட்டமைப்பினர் கலந்துரையாடல்
இந் நிகழ்வில் பாராளுமன்ற பாராளுன்ற உறுப்பினர் சி.சிறீதரன், பூநகரிப் பிரதேச அமைப்பாளர் செ.சிறீரஞ்சன், கிளிநொச்சி பிரதேச இளைஞர் அணிச் செயலாளர் கு.சர்வானந்தா, கிளிநொச்சி பிரதேச இளைஞர் அணிச் செயற்பாட்டாளர் கிருபாகரன் ஆகியோருடன் வேரவில் கிராம பொது மக்கள், விவசாயிகள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.
இக்கலந்துரையாடலில் இன்றுள்ள அரசியல் சூழ் நிலைகள் தொடர்பாகவும் மாகாணசபைத் தேர்தல் தொடர்பாகவும் மக்கள் அதனை எவ்வாறு எதிர் கொள்ளப் போகின்றார்கள் என்பது தொடர்பாகவும் விரிவாக ஆராயப்பட்டுள்ளது.
இக் கலந்துரையாடலில் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் கருத்துத் தெரிவிக்கையில், 13ம் திருத்தம் என்பது இலங்கை – இந்திய அரசுகளால் திடீரெனக் கொண்டுவரப்பட்ட ஒரு குறைப் பிரசவமாக உலகத்தால் பார்க்கப்படுகிறது. இந்தப் 13ஆம் திருத்தத்தின் மூலம் தமிழ் மக்களின் அபிலாசையானது பூர்த்தி செய்யப்படும் என்ற எண்ணப்பாட்டை நாம் முதலில் கைவிட வேண்டும்.
13ஆம் திருத்தம் தமிழர்களின் அரசியல் அபிலாசைகளைப் பூர்த்தி செய்வதற்காக நீடித்து நிலைக்கக் கூடிய ஒரு தீர்வைத் தமிழர்கள் பெறுவதற்கு ஒரு ஆரம்பப் புள்ளியாகவோ அல்லது இடைக்காலத் தீர்வாகவோ நினைத்துத் தமிழர்கள் ஏமாறக்கூடாது. நாங்கள் எங்கள் இலட்சியத்தினை அடைவதற்குத் தொடர்ந்தும் ஜனநாயக ரீதியாகப் போராட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம் என்பதை நாம் முதலில் உணரவேண்டும்.
முழு இராணுவப் பிரசன்னத்திற்குள்ளும் நேரடியான இராணுவ ஆட்சி முறைக்குள்ளும் வைத்திருக்கப்படும் வரை மானிட தர்மத்துக்கு மாறாக எம்மீது குற்றம் புரிந்தோரே எம்மைக் காப்பதாகத் தெரிவித்து அவர்களே எம்மீது நடாத்தப்பட்ட குற்றங்களிற்கெதிராக விசாரிப்பதென்பது எவ்வளவு தூரம் நியாயமானது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
இக்கிராம ரீதியான யாத்திரை அல்லது மக்கள் சந்திப்பென்பது ஒவ்வொரு தமிழனதும் மன உணர்வை சர்வதேசத்தின் காதுகளிற்குள் கொண்டு செல்கிறது என்பதனை நாம் அறியவேண்டும். எனவே தமிழர் அனைவரும் விழித்தெழ வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன் என்றார்.
கிளிநொச்சி வேராவில் கிராம மக்களுடன் த.தே. கூட்டமைப்பினர் கலந்துரையாடல்
Reviewed by Admin
on
July 05, 2013
Rating:

No comments:
Post a Comment