ஒருங்கிணைப்பபுக் குழுவின் தலைவராக இரா.சம்பந்தன்
கொழும்பில் நேற்று மாலை இடம்பெற்ற கூட்டத்தின் போதே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான சுரேஷ் பிரேமச்சந்திரன் வீரகேசரி வார வெளியீட்டுக்குத் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது,
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை ஜனநாயக ரீதியாக பலம் வாய்ந்த ஒரு ஸ்தாபனமாக மாற்றியமைக்கும் பொருட்டு எமது கட்சியில் அங்கம் வகிக்கும் அனைத்துக் கட்சிகளிலிருந்தும் தலா மூவர் என்ற அடிப்படையில் 15 பேரை நியமிக்க முன்னர் தீர்மானித்திருந்தோம். ஆனால், இந்த எண்ணிக்கையை 20 ஆக அதிகரிக்கும் பொருட்டு ஒவ்வாரு கட்சியிலிருந்தும் மேலும் ஒவ்வொருவரை நியமிப்பததென நேற்றைய கூட்டத்தில் முடிவு செய்துள்ளோம்.
இதன்படி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் பெறும் ஐந்து கட்சிகளிலிருந்தும் தலா நான்கு பேர் என்ற அடிப்படையில் 20 பேர் இந்த ஒருங்கிணைப்புக் குழுவில் இடம்பெறுவர். இதற்கு மேலாக இந்த ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சம்பந்தன் செயற்படவுள்ளார்.
இதேவேளை, நேற்றைய கூட்டத்தின் போது வட மாகாண சபைத் தேர்தல், இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனனுடனான சந்திப்புத் தொடர்பிலும் ஆராயப்பட்டது என்றும் அவர் தெரிவித்தார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் தமிழரசுக் கட்சி, தமிழர் விடுதலைக் கூட்டணி ஈ.பி.ஆர்.எல்.எப், புளொட், ரெலோ ஆகியன இடம்பெறுகின்றன.
ஒருங்கிணைப்பபுக் குழுவின் தலைவராக இரா.சம்பந்தன்
Reviewed by Admin
on
July 07, 2013
Rating:
Reviewed by Admin
on
July 07, 2013
Rating:


No comments:
Post a Comment