அண்மைய செய்திகள்

recent
-

கிளிநொச்சியில் பாழடைந்த கிணற்றுக்குள் விழுந்த இராணுவத்தினர்! ஒருவர் பலி, மற்றொருவர் காயம்

கிளிநொச்சி இரணைமடுவுக்கு அருகே பாழடைந்த கிணற்றுக்குள் விழுந்த இராணுவத்தினரில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றுமொருவர் காயமடைந்துள்ளார்.



கிளிநொச்சி இரணை மடு இராணுவ முகாமைச் சேர்ந்த இராணுவத்தினர் இரண்டுபேர் நேற்று சனிக்கிழமை நண்பகல் அப்பகுதியில் இருந்த பாழடைந்த கிணறு ஒன்றில் தண்ணீர் இறைத்துவிட்டு மீன்பிடிக்க முயன்றுள்ளனர்.

 மீன்பிடிப்பதற்காக அவர்கள் இருவரும் கிணற்றுக்குள் இறங்கியிருந்த நிலையில், எதிர்பாராதவிதமாக கிணறு இடிந்து விழுந்துள்ளது. இச்சம்பவத்தில் இராணுவ சிப்பாயொருவர் இடிபாடுகளுக்குள் புதையுண்டு உயிரிழந்துள்ளார்.

 சுகத் அமரசிங்க (26 வயது) என்ற சிப்பாயே உயிரிழந்தவராவார். இவரது சடலம் கிளிநொச்சி ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டுள்ளது. இவருடன் கிணற்றினுள் இறங்கிய மற்றுமொரு சிப்பாய் இடிபாடுகளில் சிக்கி படுகாயமடைந்துள்ள நிலையில் கிளிநொச்சி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக இராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


கிளிநொச்சியில் பாழடைந்த கிணற்றுக்குள் விழுந்த இராணுவத்தினர்! ஒருவர் பலி, மற்றொருவர் காயம் Reviewed by Admin on July 21, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.