தமிழ் அரசியல் கைதிகளின் பெற்றோர்,உறவினர்கள் ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பி வைப்பு
நீண்ட காலமாக சிறையில் உள்ள எமது பிள்ளைகளை எங்களுடன் வாழ விடுமாறு கோரி குறித்த கடிதத்தை அனுப்பி வைத்துள்ளனர்.
குறித்த கடிதத்தில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,,,,
எமது பிள்ளைகளின் விடுதலைக்கான முடிவு உங்கள் கையில் இருப்பதனை நாம் அறிவோம்.
யுத்தம் முடிந்து நான்கு வருடங்கள் கடந்த நிலையில் பயங்கரவாதம் மற்றும் அவசரகாலச் சட்டத்தின் கீழ் பல நூற்றுக்கணக்கானவர்கள் சந்தேகத்தின்பேரில் தடுத்து வைக்கப்பட்டிருக்கின்றார்கள்.
அதில் பெண்கள்,வயோதிபர்கள், இளைஞர்கள்,விசேட தேவையுடையவர்கள் ,உடலில் இரும்புத் துண்டுகளுடன் மருத்துவ வசதியின்றி இருப்போர் என பலர் இருக்கின்றார்கள்.
எவ்வித குற்றச்சாட்டும் சுமத்தப்படாமல், 14 நாட்களுக்கு ஒரு தடவை நீதவான் நீதிமன்றத்திற்குச் சென்று வருவோர்,உயர்நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகைத் தாக்கல் செய்தும் விசாரணைகளின்றி நீண்ட காலம் இருப்போர் நீண்ட காலம் செல்வதால் வேறு வழியின்றி குற்றங்களை ஒப்புக்கொண்டோர் என இவ்வகையில் சிறையில் உள்ளனர்.
இவர்களுடைய விடயங்களைக் கடந்த காலங்களில் பலமுறை உங்களின் கவனத்திற்குக் கொண்டு வந்திருந்தோம். இதுவரையில் அதற்கான பதில் கிடைக்காததையிட்டு நாம் கவலையடைகின்றோம்.
காலத்திற்குக் காலம் எமது பிள்ளைகளின் விடுதலை தொடர்பாக ஒவ்வொருவரும் ஒவ்வொரு கருத்துக்களை முன்வைக்கின்றார்கள்.
இருந்த போதிலும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாகிய உங்களால் மட்டுமே எமது பிள்ளைகளை விடுதலை செய்ய முடியும் என்பதனை திடமாக நம்புகின்றோம்.
நாம் எல்லா வழிகளிலும் பாதிக்கப்பட்டு,துன்பப்பட்டு, சொல்லொணா துயரங்களுடன் ஏதிலிகளாக நாம் வாழ்ந்து வருகின்றோம்.இருப்பவர்களின் குடும்பம், பொருளாதாரமின்மையால், பிள்ளைகளின் கல்வி, எதிர்காலம் என்பன பாதிக்கப்பட்டிருக்கின்றன.
குடும்பப் பொறுப்புள்ளவர்கள் சிறையில் இருப்பதனால்,அவர்களுடைய குடும்பம் சமூக ரீதியான பாதிப்புகளுக்கு உள்ளாக நேரிடுகின்றது.
அத்துடன் நாளாந்தம் உணவுக்குக்கூட வழியின்றி அவர்களுடைய குடும்பத்தினர் தவித்து நிற்கின்றார்கள். இதனால் மிகவும் சீரழிவான வாழ்க்கையையே அவர்கள் எதிர்நோக்கியிருக்கின்றனர்.
நீதிமன்றக் கட்டமைப்பின் ஊடாக விடுதலையாவதற்கு இன்னும் பல வருடங்கள் சிறையில் இருக்க வேண்டியிருக்கும்.
மேதகு ஜனாதிபதி அவர்களே எமது பகுதிகளை அபிவிருத்தி செய்து வரும் நீங்கள் எமது பிள்ளைகளின் விடயத்திலும் கவனமெடுத்து எமது பிள்ளைகளையும்,உறவுகளையும் எம்மோடு சேர்ந்து வாழ்வதற்கு பொதுமன்னிப்பளித்து அவர்களை விடுதலை செய்யுமாறு வினயமாகக் கேட்டு நிற்கின்றோம்.
மதிப்பிற்குரிய ஜனாதிபதி அவர்களே கடந்த மூன்று தசாப்த காலத்திற்கும் மேலாக நடைபெற்ற யுத்தத்தில் இழந்துபோன உயிர்களை உறவுகளைத் தவிர்ந்த மற்றைய அனைத்தையும் பெற்றுத்தர முடியுமென நீங்கள் கூறியிருந்தீர்கள்.
அதற்கமைவாக சிறையில் இருக்கும் எமது பிள்ளைகள் உறவுகளை எம்முடன் சேர்ந்து வாழ்வதற்கு வழி வகுப்பீர்கள் என்று நம்பிக்கையுடன் எதிரபார்த்து காத்து நிற்கின்றோம்.
என தமிழ் அரசியல் கைதிகளின் பெற்றோர்,உறவினர்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ அவர்களுக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடிதம் இணைப்பு
தமிழ் அரசியல் கைதிகளின் பெற்றோர், உறவினர்கள்
16-07-2013
மேதகு ஜனாதிபதி
அலரி மாளிகை
கொழும்பு
மேதகு ஜனாதிபதி அவர்களுக்கு
நீண்ட காலமாக சிறையில் உள்ள எமது பிள்ளைகளை எங்களுடன் வாழ விடுங்கள்
எமது பிள்ளைகளின் விடுதலைக்கான முடிவு உங்கள் கையில் இருப்பதனை நாம் அறிவோம். யுத்தம் முடிந்து நான்கு வருடங்கள் கடந்த நிலையில், பயங்கரவாதம் மற்றும் அவசரகாலச் சட்டத்தின் கீழ், பல நூற்றுக்கணக்கானவர்கள் சந்தேகத்தின்பேரில் தடுத்து வைக்கப்பட்டிருக்கின்றார்கள். அதில் பெண்கள், வயோதிபர்கள், இளைஞர்கள், விசேட தேவையுடையவர்கள் உடலில் இரும்புத் துண்டுகளுடன் மருத்துவ வசதியின்றி இருப்பேர் என பலர் இருக்கின்றார்கள்.
எவ்வித குற்றச்சாட்டும் சுமத்தப்படாமல், 14 நாட்களுக்கு ஒரு தடவை நீதவான் நீதிமன்றத்திற்குச் சென்று வருவோர்,
உயர்நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகைத் தாக்கல் செய்தும், விசாரணைகளின்றி நீண்ட காலம் இருப்போர்,
நீண்ட காலம் செல்வதால் வேறு வழியின்றி குற்றங்களை ஒப்புக்கொண்டோர் என இவ்வகையில் சிறையில் உள்ளனர்.
இவர்களுடைய விடயங்களைக் கடந்த காலங்களில் பலமுறை உங்களின் கவனத்திற்குக் கொண்டு வந்திருந்தோம். இதுவரையில் அதற்கான பதில் கிடைக்காததையிட்டு நாம் கவலையடைகின்றோம். காலத்திற்குக் காலம் எமது பிள்ளைகளின் விடுதலை தொடர்பாக ஒவ்வொருவரும் ஒவ்வொரு கருத்துக்களை முன்வைக்கின்றார்கள்.
இருந்த போதிலும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாகிய உங்களால் மட்டுமே எமது பிள்ளைகளை விடுதலை செய்ய முடியும் என்பதனை திடமாக நம்புகின்றோம்.
நூம் எல்லா வழிகளிலும் பாதிக்கப்பட்டு, துன்பப்பட்டு, சொல்லொணா துயரங்களுடன் ஏதிலிகளாக நாம் வாழ்ந்து வருகின்றோம். சிறையில் இருப்பவர்களின் குடும்பம், பொருளாதாரமின்மையால், பிள்ளைகளின் கல்வி, எதிர்காலம் என்பன பாதிக்கப்பட்டிருக்கின்றன.
குடும்பப் பொறுப்புள்ளவர்கள் சிறையில் இருப்பதனால், அவர்களுடைய குடும்பம் சமூக ரீதியான பாதிப்புகளுக்கு உள்ளாக நேரிடுகின்றது. அத்துடன், நாளாந்தம் உணவுக்குக்கூட வழியின்றி, அவர்களுமடய குடும்பத்தினர் தவித்து நிற்கின்றார்கள். இதனால் மிகவும் சீரழிவான வாழ்க்கையையே அவர்கள் எதிர்நோக்கியிருக்கின்றனர்.
நீதிமன்றக் கட்டமைப்பின் ஊடாக விடுதலையாவதற்கு இன்னும் பல வருடங்கள் சிறையில் இருக்க வேண்டியிருக்கும்.
மேதகு ஜனாதிபதி அவர்களே
எமது பகுதிகளை அபிவிருத்தி செய்து வரும் நீங்கள், எமது பிள்ளைகளின் விடயத்திலும் கவனமெடுத்து எமது பிள்ளைகளையும், உறவுகளையும் எம்மோடு சேர்ந்து வாழ்வதற்கு பொதுமன்னிப்பளித்து அவர்களை விடுதலை செய்யுமாறு வினயமாகக் கேட்டு நிற்கின்றோம்.
மதிப்பிற்குரிய ஜனாதிபதி அவர்களே
கடந்த மூன்று தசாப்த காலத்திற்கும் மேலாக நடைபெற்ற யுத்தத்தில் இழந்துபோன உயிர்களை (உறவுகளைத் தவிர்;ந்த மற்றைய அனைத்தையும் பெற்றுத்தர முடியுமென நீ;ங்கள் கூறியிருந்தீர்கள். அதற்கமைவாக, சிறையில் இருக்கும் எமது பிள்ளைகள், உறவுகளை எம்முடன் சேர்ந்து வாழ்வதற்கு வழி வகுப்பீர்கள் என்று நம்பிக்கையுடன் எதிரபார்த்து காத்து நிற்கின்றோம்.
நன்றி
இங்ஙனம்
தமிழ் அரசியல் கைதிகளின் பெற்றோர், உறவினர்கள்
தமிழ் அரசியல் கைதிகளின் பெற்றோர்,உறவினர்கள் ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பி வைப்பு
Reviewed by Admin
on
July 17, 2013
Rating:
.jpg)
No comments:
Post a Comment