அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் மாவட்ட விளையாட்டு விழா-2013

மன்னார் மாவட்ட விளையாட்டு விழா  இறுதி நிகழ்வு நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை மன்னார் பொது விளையாட்டு மைதானத்தில் இடம் பெற்றது.


கடந்த 13ஆம் திகதி சனிக்கிழமை ஆரம்பமான நிகழ்வின் இறுதி நிகழ்வு நேற்று மாலை இடம் பெற்றது.

இதன் போது பிரதம விருந்தினராக பாராளுமன்ற உறுப்பினர் ஹுனைஸ் பாரூக்,சிறப்பு விருந்தினர்களாக மன்னார் மாவட்ட முன்னாள் அரசாங்க அதிபர் சரத் ரவீந்திர,மேலதிக அரசாங்க அதிபர் ஸ்ரான்லி டி மேல்,அமைச்சர் றிஸாட் பதியுதீன் அவர்களின் இணைப்பாளர் என்.எம்.முனவ்பர்,மன்னார் வலயக்கல்விப்பணிப்பாளர் எம்.எம்.சியான் மற்றும் பிரதேச செயலாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இறுதி நிகழ்வில் 148 புள்ளிகளை பெற்று மன்னார் பிரதேச செயலக பிறிவுக்குற்பட்ட அணி முதலாம் இடத்தையும்,55 புள்ளிகளை பெற்று மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட விளையாட்டு அணி இரண்டாம் இடத்தையும்,45 புள்ளிகளை பெற்று மடு உதவி அரசாங்க அதிபர் பிரிவுக்குற்பட்ட விளையாட்டு அணி மூன்றாம் இடத்தையும் பெற்றுக்கொண்டனர்.

இவர்களுக்கான பரிசில்களும்,வெற்றிக்கேடயங்களும் அதிதிகளினால் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.






மன்னார் மாவட்ட விளையாட்டு விழா-2013 Reviewed by Admin on July 15, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.