கிளிநொச்சி வங்கியொன்றில் போலி நாணயத்தாள்
கிளிநொச்சி, முழங்காவில் பகுதியில் வங்கியொன்றில் வைப்பிலிடுவதற்காக இரு போலி நாணயத்தாள்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் இரு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
முழங்காவில் பகுதியில் அமைந்துள்ள வங்கியொன்றில் வைப்பிலிடுவதற்காகவே சந்தேகநபர்கள் இப்போலிப் நாணயத்தாள்களைக் கொண்டுவந்துள்ளனர்.
அது தொடர்பில் பொலிஸாருக்குக் கிடைத்தத் தகவலுக்கு அமையவே அவர்கள் நேற்று (08) கைது செய்யப்பட்டதாக முழங்காவில் பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்டவர்கள் பூநகரி மற்றும் நாச்சிக்குடா பகுதிகளைச் சேர்ந்த 26 மற்றும் 61 வயதுடையவர்கள் என தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் கிளிநொச்சி நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன், இச்சம்பவம் தொடர்பில் முழங்காவில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Reviewed by Vijithan
on
August 09, 2026
Rating:


No comments:
Post a Comment