வறட்சியான வானிலை குறித்து வௌியான எச்சரிக்கை
எதிர்வரும் இரண்டு மாதங்களிலும் நாட்டின் வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் வறட்சியான வானிலையை எதிர்பார்க்க முடியும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
காற்றின் வேகம் குறைவடைவதனால் உடலால் உணரும் வெப்பநிலை மேலும் அதிகரிக்கக்கூடும் என்றும் அத்திணைக்களம் மேலும் அறிவித்துள்ளது.
நிலவும் வறட்சியான வானிலை காரணமாக அநுராதபுரம் மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களில் உள்ள நீர்த்தேக்கங்கள் வற்றிப்போயுள்ளமையால் மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
அத்துடன், பல மாவட்டங்களைப் பாதித்துள்ள கடும் வறட்சியான வானிலை காரணமாக நாட்டின் பல பகுதிகளில் இந்த நாட்களில் உடலால் உணரும் வெப்பம் அதிகரித்து காணப்படுவதாகவும் வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, திருகோணமலை, மட்டக்களப்பு, பொத்துவில் போன்ற பகுதிகளில் இன்று காலை 6.00 மணியளவிலேயே 29 செல்சியஸ் பாகையை விட அதிகமான வெப்பநிலை பதிவாகியிருந்தது.
வறட்சியான வானிலை குறித்து வௌியான எச்சரிக்கை
Reviewed by Vijithan
on
August 09, 2026
Rating:
Reviewed by Vijithan
on
August 09, 2026
Rating:


No comments:
Post a Comment