இரசாயன உர பாவனைக்கு சுகாதார அமைச்சு கட்டுப்பாடு விதிப்பு
பயிர்செய்கையின் உற்பத்திகளை அதிகரிப்பதற்காக விவசாயிகள் அதிகமாக பயன்படுத்தும் இரசாயன உரம் மனிதனுக்கு எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்துகிறது.
தற்போது இலங்கையில் நெல், சில உணவுப் பொருள் உற்பத்தியில் தன்னிறைவு கண்டுவரும் வேளையில் இரசாயன உரத்தின் பாவனை சூழலினுடைய உயிர்ப் பல்வகைமையை மாற்றியமைக்கிறது. மேலும் நிலத்தடி நீர் மாசடைவதோடு மண்ணின் தன்மையும் மாற்றமடைகிறது.
அண்மையில் சுகாதார அமைச்சு மேற்கொண்ட ஆய்வுகளின் படி ஏறத்தாழ 4 இலட்சத்து 50ஆயிரம் பேர் சிறுநீரக நோயால் இலங்கையில் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் நோய்கான காரணம் இரசாயன உரம் பயன்படுத்தி உற்பத்தி செய்யப்பட்ட உணவுகளை உட்கொண்டமை என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதனால் சுகாதார அமைச்சு விவசாயிகளை இரசாயன உரத்திற்குப் பதிலாக இயற்கை உரங்களைப் பயன்படுத்துமாறு ஆலோசனை வழங்கியுள்ளது. அதன்படி கடந்த வாரம் அமைச்சரவை இந்த தீர்மானத்திற்கு அனுமதியளித்துள்ளது.
இரசாயன உர பாவனைக்கு சுகாதார அமைச்சு கட்டுப்பாடு விதிப்பு
Reviewed by Admin
on
July 31, 2013
Rating:

No comments:
Post a Comment