புனர்வாழ்வின் பின்னரும் வாழமுடியவில்லை ,வன்னியில் முன்னாள் போராளிகள் அவதி.
பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வருவதாகவும் இதனால் தமது வாழ்வாதாரத் தேவைகளை பூர்த்திசெய்ய முடியாத நிலை தோன்றியுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.
முல்லைத்தீவு, கிளிநொச்சி மாவட்டங்களில் புனர்வாழ்விற்குப் பின்னர் மீள்குடியேறியுள்ள முன்னாள் போராளிகள் பலர் ஐ.ஓ.எம். நிறுவனத்தினால் இவர்களுக்காக வழங்கப்படுகின்ற வாழ்வாதார உதவிகளை இன்னமும் பெற்றுக்கொள்ள முடியாதவர்களாக பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொண்டு வருவதாகத் தெரிவிக்கின்றனர்.
குறித்த நிறுவனத்தின் பிராந்திய அலுவலகங்களுக்கு பல முறை சென்று கோரிக்கைகளை முன்வைத்துள்ள போதிலும் தமக்கான உரிய வாழ்வாதார உதவிகள் இன்னமும் கிடைக்கவில்லை எனவும் இவர்கள் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை முன்னாள் போராளிகளுக்காக வழங்கப்படுகின்ற இலகு கடன்திட்டத்தின் கீழான கடன்களைப் பெற்றுக்கொள்வதற்கும் தமக்கு பல்வேறு கஷ்டங்கள் நிலவுவதாகவும் இவர்கள் தெரிவிக்கின்றனர்.
குறிப்பாக தமது தொழில் நடவடிக்கைகளுக்காக விண்ணப்பிக்கின்ற தொகைகளை விட குறைந்த தொகைகளையே கடன்களாக வழங்குவதாகவும் இதனால் தமது வாழ்வாதாரத் தேவைகளைக் கூட பூர்த்திசெய்யமுடியாமல் கஷ்டங்களை எதிர்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை யாழ்ப்பாணம், கொழும்பு, முல்லைத்தீவு போன்ற பகுதிகளிலுள்ள தொடர்புடைய அலுவலகங்களுக்கு வாழ்வாதார உதவிகளைப் பெற்றுக்கொள்வதற்காக பல முறை செல்கின்ற பொழுதிலும் தமக்கான உதவிகள் சீரான முறையில் இன்னமும் கிடைக்கவில்லை எனவும் இவர்கள் தெரிவிக்கின்றனர்.
எனவே போரால் பாதிக்கப்பட்டவர்களுக்கான வாழ்வாதார உதவிகளை வழங்குகின்ற பொழுது தங்களையும் இணைத்துக் கொள்ளுமாறும் இம் முன்னாள் போராளிகள் அரசாங்க அதிபர்களிடமும் பிரதேச செயலர்களிடமும் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
வன்னிப்பகுதியில் முன்னாள் போராளிகள் தமக்கான வாழ்வாதார உதவித் திட்டக் கொடுப்பனவுகளையும் இலகு கடன்களையும் பெற்றுக்கொள்வதில்

Reviewed by Admin
on
July 31, 2013
Rating:
No comments:
Post a Comment