மன்னார் மாவட்டத்தில் தொடர் மின் தடை-மன்னார் மக்கள் பல விதங்களிலும் பாதிப்பு.
மன்னார் மாவட்டத்தில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக இரவு,பகல் பாராது நாளாந்தம் மின் தடங்கல் ஏற்படுவதினால் மன்னார் மாவட்ட மக்களும்,மாணவர்களும் பல்வேறு பிரச்சினைகளுக்கும்,இன்னல்களுக்கும் முகம் கொடுத்து வருவதாக தெரிவித்துள்ளனர்.
மன்னார் மாவட்டத்தில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக திடீர்,திடீர் என மின்சாரம் தடைப்பட்டு வருகின்றது.இதனால் மின் பாவனையாளர்களது விலையுயர்ந்த மின் உபகரணங்கள் பழுதடைந்துள்ளதாக மின் பாவனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
தற்போது முஸ்லிம்கள் புனித நோன்புக்காலத்தை அனுஸ்ரித்து வருகின்ற நிலையில் ஆதிகாலை நேரங்களில் மின் தடங்கல் ஏற்பட்படுகின்றமையினால் புனித நோன்புக்கடமைகளை நிறைவேற்றிக்கொள்வதில் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.
இதே வேளை எதிர் வரும் மாதம் தரம் 5 புலமைப்பரிசில் பரிட்சை மற்றும் கா.பொ.த.உயர் தர பரிட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்கள் தமது கற்றல் செயற்பாடுகளில் ஈடுபட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் பெற்றோர் கவலை தெரிவித்துள்ளனர்.
தற்போது இரவு நேரத்தில் திருடர்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளமையினால் மக்கள் அச்ச நிலையில் உள்ளதாகவும் தெரிவித்துள்ளதோடு நாளந்தம் பல மணி நேரம் மின் தடங்கல் ஏற்படுகின்ற போதும் மாதம் முடிவில் அதிகரித்த மின் பட்டியல் வருவதாகவும் மின் பாவனையாளர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக இலங்கை மின்சாரசபையின் பிரதம மின் பொறியியலாளர் எஸ்.பிரபாகரன் அவர்களை தொடர்பு கொண்டு கேட்ட போது,,,,,,
மன்னார் தொடக்கம் புத்தளம் வரையில் உள்ள அதியுயர் மின் கோபுரங்ளில் உள்ள மின் கம்பிகளில் காபன் மற்றும் உப்பு படிவதினால் அடிக்கடி மின் தடங்கல் ஏற்படுகின்றது.
இந்த பிரச்சினை ஒவ்வொரு வருடமும் இக்காலப்பகுதியில் இடம் பெறுகின்றது. 'இயற்கைக்கு எதிராக எம்மால் ஒன்றும் செய்ய முடியாது' என தெரிவித்தார்.
மன்னார் மாவட்டத்தில் தொடர் மின் தடை-மன்னார் மக்கள் பல விதங்களிலும் பாதிப்பு.
Reviewed by Admin
on
July 30, 2013
Rating:

No comments:
Post a Comment