கூரையிலிருந்த றோயல் கல்லூரி ஆசிரியை நேற்றிரவு கீழே இறக்கப்பட்டார்!
கொழும்பு, றோயல் கல்லூரியின் இரண்டாவது மாடியில் கூரையின் மீதேறியிருந்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த ஆசிரியை நேற்றிரவு கீழே இறக்கப்பட்டார்.
ஆசிரியையிடம் பொலிஸார் மேற்கொள்ளப்பட்ட பேச்சுவார்த்தையை அடுத்தே அவர் கீழே இறங்க இணக்கம் தெரிவித்தார்.
ஆசிரியையை கீழே இறக்கிய பொலிஸார் கறுவாத்தோட்ட பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று அவரிடம் வாக்குமூலத்தை பெற்றுக்கொண்டதன் பின்னர் ஆசிரியையை வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நேற்று காலை உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்த ஆசிரியை 10 மணித்தியாலங்கள் கடந்துள்ள நிலையிலும் அவ்விடத்திலேயே இருப்பதனால் அவரை இறக்குவதற்கான முயற்சிகளை பாதுகாப்பு தரப்பினர் நேற்று மாலை மேற்கொண்டிருந்தனர்.
அம்புலன்ஸ் வண்டி, தீயணைப்பு கருவிகள் ஆகியன தயார் நிலையில் அவ்விடத்தில் வைக்கப்பட்டிருந்தன. அத்துடன் அவர் உண்ணாவிரதமிருக்கும் இடத்திலிருந்து இரண்டாவது மாடிக்கருகில் மெத்தையும் போடப்பட்டிருந்தது.
இந்நிலையிலேயே அவருடன் பேச்சுவார்த்தை நடத்திய பொலிஸார், இந்த விவகாரம் தொடர்பில் கல்வியமைச்சருடன் பேச்சுவார்த்தை நடத்தி சுமுகமான தீர்வை பெற்றுக்கொள்ளலாம் என்று வழங்கிய உறுதிமொழியை அடுத்தே அவர் உண்ணாவிரதத்தைக் கைவிட்டு கூரையிலிருந்து இறங்க இணங்கியுள்ளார்.
கூரையிலிருந்த றோயல் கல்லூரி ஆசிரியை நேற்றிரவு கீழே இறக்கப்பட்டார்!
Reviewed by Admin
on
July 31, 2013
Rating:

No comments:
Post a Comment