அண்மைய செய்திகள்

recent
-

செஞ்சிலுவைச்சங்கத்தின் தண்ணீரில் மீட்ப்பு பயிற்சி முகாம்(படங்கள் )

இலங்கை செஞ்சிலுவைச் சங்க மன்னார் மாவட்ட கிளையானது மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்துடன் இணைந்து வெள்ளம் மற்றும் நீருடன் தொடர்புடைய அனர்தத்தங்களின் போது பாதிக்கப்படுபவர்களை பாதுகாப்பதற்கான இரண்டு நாள் கொண்ட மீட்பு நடவடிக்கைப் பயிற்சியை கடந்த சனி மற்றும்  ஞாயிற்று கிழமை (13,14.07.2013) வங்காலைபாடு கடற்படை பயிற்சி முகாமில் நடாத்தியது இப்பயிற்சி நெறிக்கு தெரிவு செய்யப்பட்ட கிராமங்களான பாலியாறு இலுப்பக்கடவை கள்ளியடி குஞ்சுக்குளம் மற்றும் பெரியமுறிப்பு கிராமங்களில் இருந்து செஞ்சிலுவைச் சங்க தொண்டர்கள் கலந்து கொண்டனர். 

மன்னார் மாவட்ட கடற்படையின் சிறப்பு படை பிரிவினர் இப் பயிற்சி நெறியை முன்னின்று நடத்தினர். ஆரம்ப விழாவின் போது சங்கத்தன் தலைவர் மற்றும் கிளை அங்கத்தினரும் பங்குற்றியதுடன், தலைவர் திரு ஜே. ஜே கெனடி அவர்கள் பங்குபற்றுனர்களை சரியான முறியல் பயிற்சியினை பெற்று அனர்தங்கள் ஏற்படும் தருனங்களில் காப்பாற்றுதல் நடவடிக்கைகளில் ஈடுபடவேண்டுமென்றும் மற்றும் ஏனையோருக்கும் இந்த அறிவினை வழங்கவேண்டும் என்பதனை விளங்கினார்.


மேலும் படங்கள் 

http://photos.newmannar.com

செஞ்சிலுவைச்சங்கத்தின் தண்ணீரில் மீட்ப்பு பயிற்சி முகாம்(படங்கள் ) Reviewed by NEWMANNAR on July 16, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.