அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் மாவட்ட மாகாண சபை அபேட்சகர் அறிமுகம்.

முசலி மணக்குளத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட அலிகான் ஷரீப் சிறந்ந ஒரு உடற்கல்வி ஆசிரியராக இருந்து முசலி.ம.வி. மாணவர்களின் விளையாட்டுத்;துறையையும் , ஒழுக்கத்தையும் சிறப்பாக வளர்த்த ஒருவர். இவர் ஒரு புலவர் பரம்பரையைச் சேர்ந்தவர் என்பதால் இவரிடம் கவியாற்றல், பேச்சாற்றல் என்பன நிறையவே காணப்பட்டது. இவரால் வளர்க்கப்பட்ட மாணவர்களில் பல பேச்சாளர்கள் இன்றும் எமது பிரதேசத்தில் மிளிர்வதைக் காணலாம்.


நூல் விமர்சகர், ஆய்வாளர், பட்டிமன்றப் பேச்சாளர், கவியரங்கக் கவிஞர், அரசியல் பேச்சாளர், மாலிகாவத்தை வட்டாரக் கல்வி அதிகாரி, மேல் மாகாண பிரதிக்கல்விப் பணிப்பாளர், மீள் குடியேற்ற அமைச்சரின் இணைச் செயலாளர், வர்த்தகக் கைத்தொழில் அமைச்சரின் இணைச் செயலாளர் போன்ற பல வகிபாகங்களைக் கொண்டிருந்த இவர் பண்டாரவெளி முஸ்லிம் பாடசாலை , காங்கேசன் துறை நடேஷ்வரா பாடசாலை, மன்ஃமுசலி ம.வி. முந்நாள் ஆசிரியர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


முந்நாள் சனாதிபதி ஆர்.பிரேமதாசவுடன் நெருங்கிய தொடர்பைக் கொண்டிருந்த இவர். முசலிப் பிரதேசத்திற்கு அவரை முதன் முதல் அழைத்துவந்தவரும் இவரே. முசலிப்பிரதேச மக்கள் மத்தியில் அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்தியவரும் இவரே. இவரின் திறமைகளை இனம் கண்ட முந்நாள் பிரதிக் கல்வி அமைச்சர் ராஜமனோகரி புலேந்திரன் தனது அந்தரங்கச் செயலாளராகவும் இவரை பயன்படுத்திக் கொண்டார். சிறுவயது முதலே இவர் தமிழ் மக்களுடனும் , முஸ்லி;ம் மக்களுடனும் சிறப்பான உறவுகளைப் பேணி வந்தவரே இவர்.


மேல் மாகாண உடற்கல்வி அதிகாரியாகப் பணிபுரிந்து பிரதேச விளையாட்டுத் துறைக்காகவும், கல்விக்காகவும் அதிகம் சேவை புரிந்துள்ளார்.

இவரின் திறமைகளையும் மனித நேயத்தையும், தமிழ், முஸ்லிம், உறவுகளையும் இனம் கண்ட அமைச்சர் றிசாத்பதியுதீன் அவர்கள் இவரை தனது புனிதப் பயணத்தில் இணைத்துக்கொண்டார். அன்றிலிருந்து இன்றுவரை அமைச்சரோடு இணைந்திருந்து அமைச்சரின் பணிகளுக்கு பெரும் உதவி செய்து வருகின்றார். தமிழ் முஸ்லிம் ஒற்றுமைக்காக அதிகமாகப் பாடுபடும் இவரின் முயற்சி அனைவராலும் பாராட்டப்படுகிறது.
வட மாகாணத்தில் தமிழ், முஸ்லிம் உறவு இவ்விரு இனங்களுக்கும் பெரும் பலமாகவே அமையும், இதுவே உண்மையாகும், பிரதேச வாதம், ஊர்வாதம், மதவாதம் என்பவற்றையெல்லாம் தாண்டிப்பயணம் செய்யும் அமைச்சரின் வழியிலேயே இவரும் பயணிக்கிறார். ஆகவே இவரையும் பலப்படுத்த வேண்டிய தேவை எமக்கு உள்ளது.  

பிரேமதாச ஆட்சிக்காலத்தில் முசலிப் பிரதேச குடும்பம் அனைத்திற்கும் அவரின் செல்வாக்கைப் பயன்படுத்தி தலா 6000 ரூபாவை வங்கியினுடாகப் பெற்றுக் கொடுத்தார். அத்தொகை இன்று யோசித்தால் 600000 ரூபாவுக்குச் சமனாகும். எமது பிரதேச மக்களிடம் இருந்து எவ்வித கைமாறையும் எதிர்பாராமல்தான் அவர் இப்பணியை அன்று செய்தார்.

இவரிடம், அமைச்சரிடமிருந்து தனக்கோ, தனது குடும்ப உறவுகளுக்கு மட்டுமோ சலுகைகளையும், உத்தியோகங்களையும் பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற எண்ணமும், செயற்பாடும் இல்லை. ஏழை மக்களுக்கும், தமிழ் உறவுகளுக்கும் நியாயமான உதவிகளை பெற்றுக் கொடுப்பதைக் காணமுடிகிறது. இன்று தமிழ் உறவுகளும் இவரின் பணியைப் பாராட்டுவதை அறியக்கூடியதாக உள்ளது.

வன்னிப் பிரதேசத்தில் இன்று ஏற்பட்டுள்ள அபிவிருத்திக்கு அரசும், அரசின் பங்காளிக்கட்சிகளும், அமைச்சர் றிசாத்பதியுதீன் அவர்களும் , அவரின் இணைப்பாளர்களும், பணியாளர்களும் முக்கியமானவர்கள். என்பதை வன்னிப் பிரதேச மக்கள் அனைவரும் புரிந்து கொண்டு நன்றியுணர்வுடன் உள்ளனர்.


மன்னார் மாவட்ட மாகாண சபை அபேட்சகர் அறிமுகம். Reviewed by Admin on August 23, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.