ஆஸி. செல்ல முயன்ற 27 பேர் கைது
அம்பலாங்கொட, காலி பேருவளை ஆகிய பிரதேசங்களில் நேற்று புதன்கிழமை இரவு இவர்களை கைதுசெய்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
அம்பலாங்கொடவில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்ததாகக் கூறப்படும் 8 பேரையும் காலியில் உள்ள வீடு ஒன்றில் தங்கியிருந்ததாகக் கூறப்படும் 13 பேரையும் பேருவளையில் உள்ள வீடு ஒன்றில் தங்கியிருந்ததாகக் கூறப்படும் 6 பேரையும் கைதுசெய்துள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.
இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்கள் அம்பலாங்கொட, காலி, நீர்கொழும்பு, திருகோணமலை, வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
இவர்களை பலப்பிட்டிய நீதவான் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
ஆஸி. செல்ல முயன்ற 27 பேர் கைது
Reviewed by Admin
on
August 29, 2013
Rating:

No comments:
Post a Comment