மத விவகாரம்; நவீபிள்ளையிடம் அறிக்கை கையளிப்பு
திருகோணமலையில் சிவில் சமூக பிரதிநிதிகளை நவநீதம்பிள்ளை இன்று புதன் கிழமை சந்தித்த போதே நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் பிரதிநிதிகளால் இந்த அறிக்கை கையளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயெ மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
"யுத்தத்திற்குப் பிந்திய கடந்த மூன்று வருடங்களாக முஸ்லிம்களின் மத உரிமைகளை மீறும் வகையில் மேற்கொள்ளப்பட்டுவரும் வணக்கஸ்தலங்கள் மீதான தாக்குதல்கள், தீவிரமடைந்துவரும் வெறுப்புணர்வு பிரசாரங்கள் என்பன அவ் அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
அத்துடன் முஸ்லிம்களின் கலாசார உரிமைகளுக்கு எதிரான இனவாத அச்சுறுத்தல் நடவடிக்கைகள் தொடர்பிலும் முஸ்லிம்களின் வியாபார நலன்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டுவரும் அச்சுறுத்தல்கள் மற்றும் தாக்குதல்கள் தொடர்பிலும் இவ்வறிக்கையில் விரிவானதும் ஆதாரபூர்வமானதுமான விவரங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.
அத்துடன் முஸ்லிம்களுக்கு எதிரான மத உரிமை மீறல் சம்பவங்களின்போது சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்டாது பொலிஸார் பராமுகமாக நடந்து கொண்டமை தொடர்பிலும் இதுவிடயத்தில் அரசாங்கம் தனது கடமையைச் செய்யத் தவறியமை தொடர்பிலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேற்படி சம்பவங்களுடன் சம்பந்தப்பட்டவர்களைக் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்துவதற்குப் பதிலாக முஸ்லிம்களுக்கு எதிரான சக்திகளை ஊக்குவிக்கும் வகையிலேயே அரசாங்கத்தின் செயற்பாடுகள் அமைந்திருந்தன எனவும் இவ் அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது".
மத விவகாரம்; நவீபிள்ளையிடம் அறிக்கை கையளிப்பு
Reviewed by Admin
on
August 29, 2013
Rating:

No comments:
Post a Comment