காணாமல் போனவர்களின் குடும்பங்களுக்கு உரிய தீர்வுகள் வழங்கப்பட வேண்டும்-சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம்
இயற்கை அனர்த்தங்கள் மற்றும் போர் காரணமாக வருடாந்தம் லட்சக் கணக்கானவர்கள் இவ்வாறு தங்களின் அன்புக்குரியவர்களிடமிருந்து பிரிந்து செல்வதாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் காணாமல் போனோர் தொடர்பான பிரிவின் தலைவர் மேரி அனன் பெகாஸோ தெரிவித்துள்ளார்.
காணாமல் போனவர்களுக்கு என்ன நேர்ந்தது என்பது பற்றி சரியாக அறிந்து கொள்ளவே அவர்களது குடும்ப உறுப்பினர்கள் கூடுதலாக விரும்புகின்றனர்.இது ஒர் அடிப்படை உரிமையாகும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
காணாமல் போனோர் தொடர்பான சர்வதேச தினம் நாளை அனுஸ்டிக்கப்பட உள்ளது. இதனை முன்னிட்டு வெளியிட்டுள்ள விசேட அறிக்கையில் அவர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
காணாமல் போனவர்களின் குடும்பங்களுக்கு உரிய தீர்வுகள் வழங்கப்பட வேண்டும்-சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம்
Reviewed by Admin
on
August 29, 2013
Rating:

No comments:
Post a Comment