சட்டவிரோதமாக தயாரிக்கப்பட்ட 36,000 சிகரெட்டுக்கள் மீட்பு
காத்தான்குடி பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி அஜித் பிரசன்னாவின் உத்தரவின் பேரில் சென்ற காத்தான்குடி பொலிஸ் நிலைய போதை தடுப்பு பிரிவினர் இந்த சிகரெட்டுக்களை கைப்பற்றியுள்ளனர்.
காத்தான்குடி பொலிஸ் நிலைய போதை தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி ஆர்.எஸ்.எதிரிசூரிய தலைமையில் போதை தடுப்பு பிரிவு பொலிஸ் உத்தியோகத்தர்களான பி.எஸ்.திலகரட்ன, எம்.லக்மல், எஸ்.கே.பி.டி.எம்.தெண்ணக்கோன், டி.எம்.என்.மதுசங்கர் ஆகியோர் இந்த சிகரெட்டுக்களை கைப்பற்றியுள்ளனர்.
காத்தான்குடி பிரதான வீதியிலுள்ள சில்லறைக்கடை ஒன்றின் களஞ்சிய அறையில் வைக்கப்பட்டிருந்த நிலையில் இவை மீட்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.
சுமார் ஏழு இலட்சம் ரூபா பெறுமதியான சிகரெட்டுக்கள் இதன்போது கைப்பற்றப்பட்டுள்ளனர். இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
சட்டவிரோதமாக தயாரிக்கப்பட்ட 36,000 சிகரெட்டுக்கள் மீட்பு
Reviewed by Admin
on
August 24, 2013
Rating:
Reviewed by Admin
on
August 24, 2013
Rating:


No comments:
Post a Comment