இன்று ரமலான் நோன்பு பெருநாள்
காலத்தை வென்று நிற்கும் கருத்துக் கருவூலமான உலகப் பொதுமறை திருமறை திருக்குர் ஆன் அருளப்பட்ட மாதம்.
இரவில் கால் வலிக்க நின்று வணங்கி - இறைவன் தந்த உபகாரத்திற்கு இந்நன்றி போதாது - என உணர்ந்து தொழ 'தராவீஹீ' சிறப்புத் தொழுகையை தந்த தனிப் பெரும் மாதம். ஆயிரம் மாதத்திற்கும் மேலாக வணங்கினால் கிடைக்கும் நன்மையை ஒரே இரவில் (லைலதுல் கதிர்) கிடைக்கச் செய்யும் ஒப்பற்ற மாதம்.
படைத்த இறைவனின் பரிவையும், பாசத்தையும், அருளையும், அணுகிரகத்தையும், மன்னிப்பையும், மறுமை பேறையும் அதிகமதிகம் கொட்டிக் கொடுக்கும் அருள் நிறைந்த மாதத்தில் புனித நாள் தான் ரம்ஜான்.
நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.
நோன்பு உடலை சுத்தம் செய்வதைப் போல் ஜக்காத்து செல்வத்தை சுத்தம் செய்கிறது.
செல்வத்திலிருந்து இறைவன் கூறும் அளவை ஏழைகளுக்கு கொடுக்கும் போது எஞ்சிய செல்வம் பரக்கத்தானதாக பலன் தருவதாக நிலை பெற்றதாக மாறி விடும். சோதனைகளை துஆ வைக் கொண்டு வெல்லுங்கள் என்று நபி(ஸல்) கூறினார்கள்.
(நபிமொழி) எனவே ஆண்டு முழுவதும் ஜக்காத்து கொடுக்கலாம் இருப்பினும் ஒரு நற்செயலுக்கு எழுபது பங்கு அதிகமான கூலி வழங்கப்படும் ரமலான் மாதத்தில் கொடுப்பது மிகவும் சிறப்பு.
புலனடக்கி நோன்பிருந்தால் அடியார்க்கு அதிக தி கிடைக்க பெறுகிறது. என்பதை அல்குர்ஆன் ஆதாரத்துடன் விளக்குகிறது.
நபி மூஸா (அலை) அவர்கள்இ 30 நாட்கள் நோன்பிருந்தார்கள்.
ரமலான் மாதத்தில் பகல் முழுவதும் முஸ்லீம்கள் நோன்பு இரவு நேரங்களிலே இறை வணக்கம் புரிந்து - நன்றி செலுத்தி மாதத்தின் முடிவு பெற்ற இரவிலே இறைவன் வழங்கிய கூலியை பெற்றுக் கொண்டு மறு நாள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் நாள் ஈதுப் பெருநாள்.
இந்நாளில் நாம் மற்றவர்களுக்கும் பித்ரா என்னும் தர்மத்தை வழங்கி ஒருவர் மற்றொருவருடன் கை குலுக்கி மகிழ்ச்சியை தெரிவிக்கும் நாள் ஈகைப் பெருநாள் என்னும் ஈதுத் திருநாளாகும்.
தமிழ் பேசும் முஸ்லிம்கள் அனைவருக்கும் இனிய நோன்பு பெருநாள் வாழ்த்துக்கள்
ஈத்முபராக்!
இன்று ரமலான் நோன்பு பெருநாள்
Reviewed by Admin
on
August 09, 2013
Rating:
Reviewed by Admin
on
August 09, 2013
Rating:


No comments:
Post a Comment