அண்மைய செய்திகள்

recent
-

முல்லைத்தீவு பகுதியில் நடந்த சோகம்..24 வயது இளைஞன் ஒருவர் சடலமாக மீட்ப்பு.!

 முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பில் காணாமல் போன துடுப்பாட்ட வீரர் கிணற்றில் இருந்து #சடலமாக மீட்கப்படுள்ளார்.

நேற்றையதினம் (25.01.2026) இரவு சுமார் 7.30 மணியளவில், குறித்த இளைஞன் காணாமல் போன நிலையில், புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் தாயார் முறைப்பாடு செய்த நிலையில், இளைஞனின் வீட்டிற்கு அருகாமை உள்ள விடியல் விளையாட்டு மைதான கிணற்றில் இருந்து இன்று பிற்பகல் உடலமாக மீட்கப்படுள்ளார்.

குறித்த சம்பவத்தில் புதுக்குடியிருப்பு 10ம் வட்டாரம் பகுதியில் வசித்து வரும் 24 வயதுடைய பாலசுப்பிரமணியம் சாம்சன் என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இளைஞன் உயிரிழந்ததற்கான காரணம் வெளியாகவில்லை.. மேலதிக விசாரணைகளை புதுக்குடியிருப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

குறித்த இளைஞன் சிறந்த துடுப்பாட்ட வீரர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இளைஞனின் உயிரிழப்பு அப்பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது





முல்லைத்தீவு பகுதியில் நடந்த சோகம்..24 வயது இளைஞன் ஒருவர் சடலமாக மீட்ப்பு.! Reviewed by Vijithan on January 26, 2026 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.