அண்மைய செய்திகள்

recent
-

இலங்கையில் 5000 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த கற்கால மனிதர்கள் பயன்படுத்தி பொருட்கள் கண்டுப்பிடிப்பு

இலங்கையில் சுமார் 5000 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த கற்கால மனிதர்கள் விவசாயத்தில் ஈடுபட்டதற்கான சான்றுகளும், அவர்கள் மட்பாண்டங்களை பயன்படுத்தியமக்கான சாட்சியங்களும் தொல் பொருள் ஆராய்ச்சியின் மூலம் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.

 ஹல்துமுல்லை வே-எலிய வல்மீதலாவ உணுகல குகையில் மேற்கொள்ளப்பட்ட தொல் பொருள் ஆராச்சியில் கற்கால மனிதர்கள் பயன்படுத்திய மட்பாண்டங்கள் உள்ளிட்ட பொருட்கள் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளன.

 தனியங்களை அரைக்கும் கற்கள், எரியூட்ட பயன்படுத்தப்பட்ட பொருட்கள் என்பன குகையில் இருந்து கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளதாக களனி பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ராஜ் சோமதேவ தெரிவித்தார். கண்டுப்பிடிக்கப்பட்ட மட்குடங்களின் பாகங்கள் மிகவும் தரமானதாக இருந்து. குடங்களை செய்வதற்காக பயன்படுத்தப்பட்ட உபகரணங்களில் பாகங்களும் குகையில் இருந்தன.

 குறித்த குகையில் வாழ்ந்த கற்கால மனிதர்கள் மிகவும் திட்டமிட்டு தமது வாழக்கையை நடத்தியுள்ளதை காணமுடிந்துள்ளதாகவும் அவர் கூறினார்.





இலங்கையில் 5000 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த கற்கால மனிதர்கள் பயன்படுத்தி பொருட்கள் கண்டுப்பிடிப்பு Reviewed by Admin on August 10, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.