பொலிஸ் துறைக்காக தனியான புதிய அமைச்சு - ஜனாதிபதி முடிவு
இதனடிப்படையில், பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் கீழ் இருந்த பொலிஸ் திணைக்களம் சட்டம் மற்றும் அமைதி என்ற புதிய அமைச்சின் கீழ் கொண்டு வரப்பட உள்ளதாக தெரியவருகிறது. பொலிஸ் கட்டளைச் சட்டத்தை செயற்படுத்துவது இந்த புதிய அமைச்சுக்கான பணியாகும்.
கடந்த 16 ஆம் திகதி 1823-70 என்ற விசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் ஜனாதிபதி இந்த புதிய அமைச்சை ஏற்படுத்துவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 13வது திருத்தச் சட்டத்தின் கீழ் மாகாண சபைகளுக்கு பொலிஸ் அதிகாரங்களை வழங்கும் நோக்கில் ஜனாதிபதி இந்த புதிய அமைச்சை ஏற்படுத்த எண்ணியிருக்கலாம் என பேசப்படுகிறது.
முக்கியமான பொலிஸ் அதிகாரங்களை மத்திய பொலிஸ் திணைக்களத்திற்கு வழங்கி விட்டு, ஏனைய அதிகாரங்கள் மாகாண பொலிஸ் திணைக்களத்திற்கு வழங்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது.''
பொலிஸ் துறைக்காக தனியான புதிய அமைச்சு - ஜனாதிபதி முடிவு
Reviewed by Admin
on
August 23, 2013
Rating:

No comments:
Post a Comment