அடுத்த ஆண்டு சுகாதாரத் துறை அபிவிருத்திக்கு 150 பில்லியன் ரூபா ஒதுக்கீடு
இது தொடர்பாக கருத்து தெரிவித்த சுகாதார அமைச்சர் மைத்திரி பால சிறிசேன, ஒவ்வொரு வருடமும் சுகாதாரத் துறையின் அபிவிருத்திக்காக 25 பில்லியன் ரூபா நிதி அதிகமாக ஒதுக்கவேண்டியுள்ளது.
அடுத்த ஆண்டில் புதிதாக 850 வைத்தியர்களையும், மூவாயிரத்து ஐநூறு தாதியர்களையும் இணைக்கவுள்ளதால் அவர்களுக்கான சம்பளத்தை வழங்குவதற்காக அதிகளவு நிதி ஒதுக்கப்படுகிறது என தெரிவித்தார்.
வரவு செலவு திட்டத்தில் ஒதுக்கப்பட்டுள்ள நிதியில் தொற்றும்,தொற்றா நோய்களால் பாதிக்கப்படும் நோயாளர்களின் பாதுகாப்பிற்காக முன்னுரிமையளிக்கப்படும். மேலும் 80 சதவீதம் நிதி நோய்ப் பாதுகாப்பிற்காக செலவிடப்படுகிறது என்றார்.
அடுத்த ஆண்டு சுகாதாரத் துறை அபிவிருத்திக்கு 150 பில்லியன் ரூபா ஒதுக்கீடு
Reviewed by Admin
on
August 23, 2013
Rating:

No comments:
Post a Comment