இந்திய மீனவர்கள் கைது செய்யப்படமாட்டார்கள்! படகுகள் மாத்திரம் பறிமுதல் செய்யப்படும்!- இலங்கை
இலங்கையின் மீன்பிடித்துறை அமைச்சர் ராஜித சேனாரத்ன இதனை செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் குறிப்பிட்டுள்ளார். இந்திய மீனவர்களின் வாழ்வாதாரங்களை கருத்திற்கொண்டு அத்துமீறும் இந்திய மீனவர்களை உடனடியாக விடுவிக்கும் அதேநேரம், அவர்களின் படகுகளை மட்டும் பறிமுதல் செய்ய ஆலோசிக்கப்படுவதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றிய யாழ்ப்பாண மீனவர் சமூகத்தின் பிரதிநிதி அந்தோனிபிள்ளை எமிலியாம்பிள்ளை, இந்திய மீனவர்களால் தமது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக குற்றம் சுமத்தினார்.
இந்திய மீனவர்கள் கைது செய்யப்படமாட்டார்கள்! படகுகள் மாத்திரம் பறிமுதல் செய்யப்படும்!- இலங்கை
Reviewed by Admin
on
August 23, 2013
Rating:

No comments:
Post a Comment