அண்மைய செய்திகள்

recent
-

விலக்கிகொள்ளப்பட்டது ஊரடங்குச் சட்டம்: பள்ளிவாசல் மீதான தாக்குதல் காட்சிகள்

கொழும்பு, கிராண்ட்பாஸ் பகுதியில் இரண்டாவது தடவையாக நேற்று 11 மாலை 6 மணி முதல் இன்று காலை 7 மணி வரை பிறப்பிக்கப்பட்டிருந்த ஊரடங்குச் சட்டம் இன்று காலை 7 மணியுடன் விலக்கிகொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

எனினும் குறித்தப் பகுதியில் பொலிஸார் மற்றும் விசேட அதிரடி படையினர் தொடர்ந்து சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

கொழும்பு கிராண்ட்பாஸ் சுவர்ண சைத்திய வீதியிலுள்ள முஸ்லிம் பள்ளிவாசல் மீது ஆயுதங்களுடன் வந்த குழுவொன்றினால் நேற்று முன்தினம் மாலை தாக்குதல் நடத்தப்பட்டது. இதனையடுத்து அப் பிரதேச மக்களுக்கும் ஆயுதங்களுடன் வந்த குழுவினருக்கும் இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து அப்பகுதியில் பெரும்பதற்ற நிலை ஏற்பட்டதுடன் நிலமையை கட்டுபாட்டிற்குள் கொண்டுவரும் பொருட்டு பொலிஸார் மற்றும் கலகத் தடுப்பு பிரிவினர் அப்பகுதியில் குவிக்கப்பட்டு பின்பு நேற்று முன்தினம் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கபட்டது.

நேற்று இடம்பெற்ற இத் தாக்குதலில் பல வீடுகளும் வாகனங்களும் சேதப்படுத்தப்பட்டதோடு 7 பேர் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் இருவர் பொலிஸார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் இப் பகுதியில் மீண்டும் பிறப்பிக்கப்பட்டிருந்த ஊரடங்குச் சட்டம் இன்று காலை 7 மணியுடன் விலக்கிகொள்ளப்பட்டுள்ளது.

Video Cilick here
விலக்கிகொள்ளப்பட்டது ஊரடங்குச் சட்டம்: பள்ளிவாசல் மீதான தாக்குதல் காட்சிகள் Reviewed by NEWMANNAR on August 12, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.