வடக்கில் பெயர்ப் பலகைகள் சிங்களத்தில் பிரசுரிக்கப்படுவது சட்டவிரோதமானது - வாசுதேவ நாணயக்கார (Video)
நாட்டின் தேசிய ஒற்றுமையை ஏற்படுத்துவதற்காக தமது அமைச்சு முன்னெடுக்கும் திட்டங்கள் அடங்கிய அறிக்கையொன்றை ஐ.நா மனித உரிமைகளுக்கான ஆணையாளர் நவனீதம் பிள்ளையிடம் கையளித்துள்ளதாக அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
நவனீதம் பிள்ளையை சந்தித்தன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
13 வது அரசியலமைப்பு திருத்தத்திற்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரம் மீள பெறப்பட்டுள்ளதா? என ஐ.நா மனித உரிமைகளுக்கான ஆணையாளர் நவனீதம் பிள்ளை வினவியதாக குறிப்பிட்ட அவர், அவ்வாறான விடயங்கள் செயற்படுத்தப்படவில்லை என்பதை விளக்கியதாக குறிப்பிட்டுள்ளார்.

ரவூப் ஹக்கீம் கருத்து:-
யுத்தத்திற்கு பின்னராக நல்லிணக்க செயற்பாடு, நாட்டில் அமுலில் உள்ள குற்றவியல் சட்டம், மற்றும் நீதியை நிலைநிறுத்தும் செயற்பாடுகள் தொடர்பில் ஐ.நா மனித உரிமைகளுக்கான ஆணையாளர் கேட்டறிந்ததாக நவநீதம் பிள்ளையுடனான சந்திப்பை அடுத்து அமைச்சர் ரவூப் ஹக்கீம் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டுள்ளார்.
முஸ்லிம் வர்த்தகர்கள் மீதான தாக்குதல்கள், பொலிஸ் திணைக்களம் பாதுகாப்பு அமைச்சிலிருந்து பிரிக்கப்பட்டமை, பயங்கரவாத தடை சட்டம் ஆகிய விடயங்கள் தொடர்பிலும் நவனீதம்பிள்ளை நீதி அமைச்சருடன் கலந்துரையாடியுள்ளார்.
இந்த அனைத்து விடயங்கள் தொடர்பிலும் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளருக்கு திருப்திகரமாக பதிலளித்ததாக அமைச்சர் ரவூப் ஹக்கீம் மேலும் தெரிவித்துள்ளார்.
டலஸ் அழகப்பெரும:-
நாட்டின் உண்மையான அனைத்து நிலைமைகளையும் நேரில் பார்ப்பதற்காகவே ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகளுக்கான ஆணையாளருக்கு அழைப்பு விடுத்ததாக அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.
இரண்டு வருடங்களுக்கு முன்னரே அழைப்பு விடுக்கப்பட்டதாக குறிப்பிட்ட அமைச்சர், ஐ.நா உறுப்புரிமையை பெற்றுள்ளமையை பெருமையாக கருதும் நாடு இலங்கை எனவும் குறிப்பிட்டுள்ளார்.
ஐ.நாவுடன் இலங்கைக்கு எவ்வித குரோதமும் இல்லை எனவும், நவனீதம் பிள்ளை இந்த நாட்டில் கற்றுக்கொள்ள வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
நவனீதம் பிள்ளைக்கு எதிராக ஆர்ப்பாட்டம்
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகளுக்கான ஆணையாளரின் இலங்கை விஜயத்திற்கு எதிராக தேரர்கள் உள்ளிட்ட சிலர் கொழும்பில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இவர்கள் ஐக்கிய நாடுகளின் கொழும்பு அலுவலகத்திற்கு அருகில் செல்ல முற்பட்ட போது அமைதியின்மை ஏற்பட்டது.
வடக்கில் பெயர்ப் பலகைகள் சிங்களத்தில் பிரசுரிக்கப்படுவது சட்டவிரோதமானது - வாசுதேவ நாணயக்கார (Video)
Reviewed by NEWMANNAR
on
August 27, 2013
Rating:

No comments:
Post a Comment