மடுமாதா வருடாந்த திருவிழா இன்று:பரிசுத்த பாப்பரசரின் பிரதிநிதி தலைமையில் கூட்டுத் திருப்பலி
மருதமடுத் திருப்பதி யின் வருடாந்த திருவிழா இன்று விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. பரிசுத்த பாப்பரசரின் அப்போஸ்தலிக்கப் பிரதிநிதி அதிமேதகு ஜோசப் ஸ் பிரற்ரி ஆண்டகையின் தலைமையில் திருவிழா கூட்டுத் திருப்பலி இன்று காலை 6.30 மணிக்கு நிறை வேற்றப்படவுள்ளது.
நேற்றைய தினம் மாலை வெஸ்பர்ஸ் ஆராதனையும் நற்கருணைப் பவனியும் இடம்பெற்றதுடன் இன்று காலை 5.30 மணி தொடக்கம் திருப்பலிப் பூஜைகள் இடம்பெற்று வருகின்றன. திருவிழா கூட்டுத் திருப்பலியில் வடக்கு, கிழக்கு, தெற்குப் பிரதேசங்களிலிருந்து ஆயர்கள் பங்கேற்கவுள்ளனர். பாப்பரசரின் அப்போஸ்தலிக்கப் பிரதிநிதியின் தலைமையில் நடைபெறும் திருவிழா கூட்டுத்திருப்பலியில் யாழ்.
மறை மாவட்ட ஆயர் பேரருட்திரு தோமஸ் செளந்தரநாயகம் ஆண்டகை மன்னார் மறை மாவட்ட ஆயர் பேரருட்திரு இராயப்பு ஜோசப் ஆண்டகை, திருகோணமலை மறை மாவட்ட ஆயர் பேரருட்திரு கிங்ஸ்லி சுவர்ம்பிள்ளை, கண்டி மறை மாவட்ட ஆயர் பேரருட் திரு வியான்னி பெர்ணான்டோ, அநுராதபுரம் மறை மாவட்ட ஆயர் பேரருட்திரு ரோபட் அந்ராதி ஆண்டகை, காலி மறை மாவட்ட ஆயர் பேரருட்திரு நேமன் விக்கிரமசிங்க ஆகியோர் பங்கேற்கவுள்ளனர்.
திருவிழா திருப்பலியையடுத்து மருதமடு அன்னையின் திருச்சுரூப பவனியும் இறுதி ஆசிர்வாதமும் நடைபெறவுள்ளன. மடுத்திருப்பதியின் திருவிழா இம்மாதம் 6ம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தினமும் நவநாள் ஆராதனைகள் இடம்பெற்றன. நேற்றைய தினம் மாலை லெஸ்பர்ஸ் ஆராதனையும் இன்று திருவிழாவும் நடைபெறுகின்றன. திருவிழா நிகழ்வுகள் நேத்திரா அலைவரிசையில் நேரடியாக ஒளிபரப்புச் செய்யப்படவுள்ளன. இம்முறை மடு திருவிழாவில் சுமார் ஐந்து இலட்சம் பக்தர்கள் நாடெங்கிலுமிருந்து கலந்து கொள்வரென மன்னார் மறை மாவட்ட குரு முதல்வர் அருட்பணி விக்டர் சோசை அடிகளார் தெரிவித்தார்.

Reviewed by Admin
on
August 15, 2013
Rating:

No comments:
Post a Comment