மட்டக்களப்பு கெவிலியாமடு தமிழர் பகுதியில் அத்துமீறிய சிங்கள வீட்டுத்திட்டம்!-பா.அரியநேத்திரன்
மட்டக்களப்பு பட்டிப்பளை பிரதேச செயலாளார் பிரிவுக்குட்பட்ட கெவிலியமடு தமிழர் பகுதியில் அத்துமீறிய சிங்கள வீட்டுத்திட்டம் ஒன்றினை இரவோடு இரவாக மட்டக்களப்பு விகாராதிபதி அவர்கள் அமைத்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் குற்றம் சுமத்தியுள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்
மட்டக்களப்பு பட்டிப்பளை பிரதேச செயலாளார் பிரிவுக்குட்பட்ட கெவிலியமடு தமிழர் பகுதியில் அத்துமீறிய சிங்கள வீட்டுத்திட்டம் ஒன்றினை உருவாக்கும் நோக்குடன் இரவோடு இரவாக 27 வீட்டுக்குறிய அத்திவாரங்கள் மட்டக்களப்பு மாவட்ட விகாராதிபதியின் தலைமையில் இடப்பட்டுள்ளதாகவும் இது குறித்து மாவட்ட அரசாங்க அதிபருக்கோ, பிரதேச செயலாளருக்கோ தெரியாது எனவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
குறிப்பாக ஒரு புறம் வடகிழக்கு பகுதியில் சிவில் நிர்வாகம் நடப்பதாக கூறும் அரசாங்கம் மறுபுறம் புத்த பிக்குகளின் ஊடாகவும் முன்னால் இராணுவ அதிகாரிகளின் ஊடாகவும் சர்வாதிகார ஆட்சியை நடாத்தி வருவதாக குறிப்பிட்ட அவர் கிழக்கு மாகாணத்தில் இராணுவம், பிக்குமார், ஆளுநர் ஆகியோரின் ஆட்சியே நடைபெறுவதாகவும் குற்றம் சுமத்தியுள்ளார்.
அத்துடன் கெவிலியமடு தமிழர் பகுதியில் மாவட்ட அரசாங்க அதிபர், பிரதேச செயலாளர் போன்றவர்களின் அனுமதியின்றி தான்தோன்றித்தனமாக “ஹெலபிம” எனும் சிங்கள அரசசார்பற்ற நிறுவனம் ஒன்றின் உதவியுடன் மட்டக்களப்பு மங்கள ராமயவின் விகாராதிபதி அம்பிட்டிய சோமரத்ன தேரர், முன்னால் இராணுவ அதிகாரியும், கிழக்கு மாகாண அபிவிருத்தி இணைப்பதிகாரியுமான மேஜர் பேர்ட்டி பெரேரா உள்ளிட்டவர்கள் வீடுகளை கட்டி வருகின்றனர்.
இது திட்டமிட்ட சிங்கள குடியேற்றம் என்பதனாலேயே இரவு நேரங்களில் வீடுகள் கட்டப்படுவதாகவும் தெரிவித்த அவர் இது குறித்து உடனடியாக மாவட்ட அரசாங்க அதிபர் பி.எஸ்.எம் சாள்ஸ் அவர்களின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளதாகவும் மேற்படி வீட்டுத்திட்டத்தை உடனடியாக நிறுத்த வேண்டுமெனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்

குறிப்பாக ஒரு புறம் வடகிழக்கு பகுதியில் சிவில் நிர்வாகம் நடப்பதாக கூறும் அரசாங்கம் மறுபுறம் புத்த பிக்குகளின் ஊடாகவும் முன்னால் இராணுவ அதிகாரிகளின் ஊடாகவும் சர்வாதிகார ஆட்சியை நடாத்தி வருவதாக குறிப்பிட்ட அவர் கிழக்கு மாகாணத்தில் இராணுவம், பிக்குமார், ஆளுநர் ஆகியோரின் ஆட்சியே நடைபெறுவதாகவும் குற்றம் சுமத்தியுள்ளார்.
அத்துடன் கெவிலியமடு தமிழர் பகுதியில் மாவட்ட அரசாங்க அதிபர், பிரதேச செயலாளர் போன்றவர்களின் அனுமதியின்றி தான்தோன்றித்தனமாக “ஹெலபிம” எனும் சிங்கள அரசசார்பற்ற நிறுவனம் ஒன்றின் உதவியுடன் மட்டக்களப்பு மங்கள ராமயவின் விகாராதிபதி அம்பிட்டிய சோமரத்ன தேரர், முன்னால் இராணுவ அதிகாரியும், கிழக்கு மாகாண அபிவிருத்தி இணைப்பதிகாரியுமான மேஜர் பேர்ட்டி பெரேரா உள்ளிட்டவர்கள் வீடுகளை கட்டி வருகின்றனர்.
இது திட்டமிட்ட சிங்கள குடியேற்றம் என்பதனாலேயே இரவு நேரங்களில் வீடுகள் கட்டப்படுவதாகவும் தெரிவித்த அவர் இது குறித்து உடனடியாக மாவட்ட அரசாங்க அதிபர் பி.எஸ்.எம் சாள்ஸ் அவர்களின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளதாகவும் மேற்படி வீட்டுத்திட்டத்தை உடனடியாக நிறுத்த வேண்டுமெனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மட்டக்களப்பு கெவிலியாமடு தமிழர் பகுதியில் அத்துமீறிய சிங்கள வீட்டுத்திட்டம்!-பா.அரியநேத்திரன்
Reviewed by NEWMANNAR
on
August 14, 2013
Rating:

No comments:
Post a Comment