மன்னார் மாவட்டத்தை குட்டி சிங்கப்பூராக மாற்றுவேன் -றிப்கான் பதியுதீன்
தென்பகுதி மக்கள் அனுபவித்து வரும் அபிவிருத்திப் பணிகள் போன்று மன்னார் மாவட்ட மக்களுக்கும் அவ் அபிவிருத்திகளை அமைச்சர் றிஷாட் பதியுதீன் பெற்றுக்கொடுத்தன் மூலம் மன்னார் மாவட்டம் அபிவிருத்தியின் மையப்பகுதியாக மாறிவருகிறது. எதிர்காலத்தில் மன்னார் மாவட்டத்தை குட்டி சிங்கப்பூராக மாற்றுவேன் என மன்னார் மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் போட்டியிடும் றிப்கான் பதியுதீன் தெரிவித்தார்.
முசலி பிரதேசத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் உரையாற்றும் போதே இதனை தெரிவித்தார் அவர் தொடாந்தும் உரையாற்றுகையில், எமது மாவட்டமானது ஏனைய மாவட்டங்களுடன் ஒப்பிடுகையில் முப்பது வருடங்கள் பின்தங்கி காணப்படுகிறது.
எமது மாவட்டத்திற்கு தேவையான அனைத்து அபிவிருத்தி திட்டங்களையும் ஆளும் கட்சியினால் மாத்திரமே மேற்கொள்ள முடியும் என்றும். எமது மக்களின் தேவைகளை உணர்ந்து சாதி மத பாகுபாடின்றி எனது சகோதரரான அமைச்சர் றிஷாட் பதியுதீன் பணியாற்றி வருகிறார். எமது மாவட்டத்தின் கல்வி, சுகாதாரம,; மீள்குடியேற்றம், தொழில் வாய்ப்பு, பாதை அபிவிருத்தி, குடிநீர் மற்றும் உட்கட்டமைப்பு போன்ற பணிகளில் நானும் அவருடன் தோளோடு தோள் நின்று வருகிறேன என தெரிவித்தார்.
மேலும் இப்பணிகளை தொடர்ந்தும் பெற்றுதருவதற்கு அரசின் கரங்களை பலப்படுத்த வேண்டும். அரசின் ஆதரவின்றி எதனையும் செய்து விட முடியாதெனவும் தெரிவித்தார்.
மன்னார் மாவட்டத்தை குட்டி சிங்கப்பூராக மாற்றுவேன் -றிப்கான் பதியுதீன்
Reviewed by NEWMANNAR
on
August 30, 2013
Rating:

No comments:
Post a Comment