கிளிநொச்சியில் விழிர்ப்புணர்வற்றோருக்கு வாழ்வாதார உதவி வழங்கும் நிகழ்வை தடுத்தி நிறுத்திய இராணுவம்.
வன்னி விழிப்புணர்வற்றோர் சங்கம் கிளிநொச்சியில் அமைந்துள்ளது.குறித்த சங்கத்தில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு பார்வையிழந்த சுமார் 65 பேர் அங்கத்துவம் வகிக்கின்றனர்.
இந்த சங்கத்தில் சகல பராயத்தினரும் அங்கம் வகிக்கும் நிலையில் இவர்களுடைய கல்வி மற்றும் வாழ்வாதாரத்திற்கு சங்கத்தினுடாக உதவிகள் வழங்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் அவர்களின் அனுசரணையுடன் சுவிஸ் எழுகை அமைப்பினால் குறித்த விழிப்புணர்வு அற்ற 65 அங்கத்துவர்களுக்கும் அத்தியாவசிய வாழ்வாதார பொருட்கள் வழங்கப்பட்டது.
இந்த பொருட்களை வைபவரீதியாக வழங்கி வைக்கும் முகமாக நேற்று புதன் கிழமை காலை 10 மணியளவில் பரந்தன் மகாவித்தியாலய பாடசாலையில் நிகழ்வொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதன் போது இராணுவம் அனுமதி வழங்கியிருந்தது.ஏற்பாடுகள் பூர்த்தியாகிய நிலையில் குறித்த பாடசாலைக்குச் சென்ற இராணுவத்தினர் குறித்த நிகழ்விற்கு தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் கலந்து கொண்டால் இந்த நிகழ்வை இரத்துச் செய்வோம் என தெரிவித்துள்ளனர்.
உடனடியாக ஏற்பாட்டாளர்கள் அவருக்குப்பதிலாக வேறு உள்ளுர் அதிதிகளை வைத்து நிகழ்வை நடாத்துவதாக இராணுவத்திடம் தெரிவித்துள்ளனர்.
எனினும் குறித்த நிகழ்வை நடத்தவே வேண்டாம் என கூறி நிகழ்வை இராணுவம் தலையிட்டு நிறுத்தினர்.
இந்த நிலையில் இறுதியாக பரந்தனில் உள்ள வன்னி விழிப்புணர்வற்றோர் சங்கத்தில் சங்கத்தின் பிரதிநிதிகளை வைத்து குறித்த வாழ்வாதார பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சியில் விழிர்ப்புணர்வற்றோருக்கு வாழ்வாதார உதவி வழங்கும் நிகழ்வை தடுத்தி நிறுத்திய இராணுவம்.
Reviewed by Admin
on
August 29, 2013
Rating:
No comments:
Post a Comment