மன்னார் பள்ளிமுனை ஆலய நிர்வாக சபை செயலாளர் அரச தரப்பு அரசியல் வாதி ஒரவரினால் கடுமையாக தாக்கப்பட்டு மன்னார் வைத்தியசாலையில் அனுமதி.
மன்னார் பள்ளிமுனை புனித லூசியா ஆலய நிர்வாக சபையின் செயலாளரான லக்ஸ்மன் பிகிராமோ என்பவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை அரச தரப்பு அரசியல் வாதி ஒருவரினால் கடுமையாக தாக்கப்பட்டு மன்னார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக பாதிக்கப்பட்டவரது சகோதரர் மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை புனித லூசியா ஆலய வீதிவழியாக நிர்வாக சபை செயலாளரான லக்ஸ்மன் பிகிராடோ தொலைபேசி கதைத்துக்கொண்டு சென்ற போது பின்னால் வாகனத்தில் வந்த மன்னார் நகர சபையின் அரச தரப்பு உறுப்பினரான செல்வக்குமார் டிலான் என்பவர் இறங்கி வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு கண்மூடித்தனமாக தாக்கியுள்ளார்.
இதன் போது கடுமையான உட்காயங்களுக்கு உள்ளான நிலையில் ஆலய நிர்வாக சபை செயலாளர் உடன் மன்னார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் மன்னார் நகர சபையின் அரச தரப்பு உறுப்பினரான செல்வக்குமார் டிலான் என்பவர் வடமாகாண சபை தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் சார்பாக மன்னார் மாவட்டத்தில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.
தேர்தல் காலங்களில் இருவருக்கும் இடையில் ஏற்பட்ட முரண்பாடுகளின் எதிரோலியாகவே இந்த சம்பவம் இடம் பெற்றுள்ளதாக தெரிய வருகின்றது.
மேலதிக விசாரனைகளை மன்னார் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மன்னார் பள்ளிமுனை ஆலய நிர்வாக சபை செயலாளர் அரச தரப்பு அரசியல் வாதி ஒரவரினால் கடுமையாக தாக்கப்பட்டு மன்னார் வைத்தியசாலையில் அனுமதி.
Reviewed by Admin
on
September 30, 2013
Rating:

No comments:
Post a Comment