இலங்கையின் பொருளாதார வரலாறுகளை அனைத்து மக்களும் அறிந்திருக்க வேண்டும்.பேராசிரியர் சிவநாதன்.
அறிந்து வைத்திருத்தல் வேண்டும் .
அந்த வகையில் இலங்கையின் பொருளா தார வரலாறு எனும் நூலை பேராசிரியர் நல்லதம்பி பேரின்பநாதன் எழுதி யாழ் . பல்கலைக்கழக பொருளியற்துறை மாணவர்களு க்குக் கொடுத்துள்ளார் .
இந்நூலைப் படிப்பதனூடாக மாணவர்களாலும் ஏனையோராலும் இலங்கையின் பொருளாதார வரலாற்றைக் கற்றுக் கொள்ள முடியுமென யாழ் . பல்கலைக்கழக கலைப்பீடாதிபதி பேராசிரியர் வி.பி. சிவநாதன் தெரிவித்தார் .
இலங்கையின் பொருளாதார வரலாற்று நூல் மற்றும் இலங்கையின் பொருளாதார வரலாறு கட்டுரைத் தொகுப்பு ஆகிய நூல்களின் வெளியீட்டு நிகழ்வு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கைலாசபதி கலையரங்கில் அண்மையில் நடைபெற்றது . இந்நிகழ்வில் கலந்து கொண்டு வெளியீட்டுரை நிகழ்த்துகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார் .
அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகை யில் , யாழ் . பல்கலைக்கழக பொருளியற்துறை விரிவுரையாளர் பேராசிரியர் நல்ல தம்பி பேரின்பநாதன் பல்கலைக்கழக விரிவு ரையாளர் என்பதற்கு அப்பால் மதிக்கப்படவேண்டியவர் .
அவர் இலங்கையின் பொருளாதார வரலாறு எனும் நூலை வெளியிடுவது பல்கலை க்கழகச் சமூகத்திற்கு மிகவும் வரவேற்கத்தக்கதொரு விடயமாகும் . ஆனால் அவர் இங்கு சேவையாற்றிவிட்டு எம்மைப் பிரிந்து செல்வது எமக்கு வேதனையளிக்கின்றது .
மாணவர்களுக்கு இலங்கைப் பொருளாதார வரலாறு எனும் நூலை அவர் வெளியிட்டுள்ளது மிகப் பெரிய சேவையாகும் . 1970 - 1982 ஆம் ஆண்டு வரையான இலங்கையின் பொருளாதார வரலாற்றைப் படித்து எழுதியுள்ளார் . பொருளியற்துறை மாணவர்களுக்கு அவசியமான விடயங்கள் இந்நூலினுள் உள்ளடக்கப்பட்டுள்ளன .
நாட்டின் பொருளாதாரத்தை மாணவர்கள் மட்டுமின்றி அனைத்து மக்களும் அறிந்து வைத்திருத்தல் வேண்டும் .
பொருளியல் தத்துவங்களை உருவாக்க அடிப்படைக் கோட்பாடாக அமைவது பொருளாதார வரலாறாகும் . எனவே மாண வர்கள் இலங்கையின் பொருளாதார வரலாற்றை நிச்சயமாக அறிந்து வைத்திருத்தல் வேண்டும் என்றார் .
இலங்கையின் பொருளாதார வரலாறுகளை அனைத்து மக்களும் அறிந்திருக்க வேண்டும்.பேராசிரியர் சிவநாதன்.
Reviewed by Admin
on
September 10, 2013
Rating:

No comments:
Post a Comment