தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அங்கீகாரத்தை பெற்றுள்ளது- முஸ்லிம் காங்கிரஸிற்கான ஆதரவு வீழ்ச்சியடையவில்லை: ரவூப் ஹக்கீம்
எனவே அந்த கூட்டமைப்புக்கு தாம் வாழ்த்து தெரிவிப்பதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
வடக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு மக்கள் வழங்கியுள்ள அதிகாரத்தை அரசாங்கம் மதிக்க வேண்டும். வடக்கு அபிவிருத்தி தொடர்பில் அரசாங்கம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து செயற்பட வேண்டும்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் வெற்றியை ஓர் சந்தர்ப்பமாக பயன்படுத்திக் கொண்டு அரசாங்கம் நல்லிணக்கத்தை ஏற்படுத்த முயற்சிக்க வேண்டும்.
வழமை போன்று தேர்தலில் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிற்கு மக்கள் வழங்கிய ஆதரவு பாராட்டுக்குரியது. கட்சியின் வெற்றிக்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்ட மற்றும் வாக்களித்த அனைவருக்கும் நன்றிகள் என ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அங்கீகாரத்தை பெற்றுள்ளது- முஸ்லிம் காங்கிரஸிற்கான ஆதரவு வீழ்ச்சியடையவில்லை: ரவூப் ஹக்கீம்
Reviewed by Admin
on
September 23, 2013
Rating:

No comments:
Post a Comment