அண்மைய செய்திகள்

recent
-

ஆசிரியர் மற்றும் அதிபர் இடமாற்றங்களை வழங்குவதற்கான முறைமையொன்றை தயாரிக்கவுள்ளதுது கல்வி அமைச்சு.

ஆசிரியர் மற்றும் அதிபர் இடமாற்றங்களை வழங்குவதற்கான உரிய முறைமையொன்றை தயாரிக்கவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது . ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களுக்கு உரிய காலத்தில் இடமாற்றங்களும் , சம்பள உயர்வுகளும் வழங்கப்படவில்லை என அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது . 

 இந்த விடயங்களை கருத்திற்கொண்டு எதிர்வரும் 6 மாதங்களுக்குள் உரிய முறையில் இடமாற்றம் வழங்கும் திட்டமொன்றை தயாரிக்கவுள்ளதாக கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது . 

 வருடாந்தம் ஆசிரியர் மற்றும் அதிபர் சேவைகளுக்கான பரீட்சைகளுக்குரிய , அட்டவணையை ஒன்றையும் எதிர்காலத்தில் தயாரிக்கவுள்ளதாக அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது . கல்விச் சேவையில் தற்போது தொழிற்சங்கங்களுடன் தோன்றியுள்ள பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது . 

 கல்வி அமைச்சின் செயலாளர் , தொழிற்சங்கங்கள் மற்றும் பொறுப்புகூற வேண்டிய நிறுவனங்கள் இந்த கலந்துரையாடலில் பங்கேற்றுள்ளதாகவும் கல்வி அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது


ஆசிரியர் மற்றும் அதிபர் இடமாற்றங்களை வழங்குவதற்கான முறைமையொன்றை தயாரிக்கவுள்ளதுது கல்வி அமைச்சு. Reviewed by Admin on September 19, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.